இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவை நோக்கி முட்டை வீசிய இளைஞரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வடக்கு இங்கிலாந்து பகுதியில் உள்ள யார்க் நகரில் மறைந்த ராணி இரண்டாம் எலிசெபத் சிலையை திறந்து வைப்பதற்காக மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் சென்றிருந்தனர்.
அப்போது தங்களை காண வந்திருந்த பொது மக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் அக்கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ”இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்ட தேசம். நீங்கள் மன்னர் அல்ல…” என்று கூறி மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார். ஆனால் அவை மன்னர் மீது விழவில்லை.
இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் ‘கடவுளே, மன்னரை காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டனர்.
அதனைதொடர்ந்து மன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் இருந்தார்.
உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், கடந்த செப்டம்பர் மாதம் மறைந்தார்.
இதனையடுத்து மன்னராக பொறுப்பேற்றிருக்கும் மூன்றாம் சார்லஸ் மீது, இங்கிலாந்து மக்களில் சிலருக்கு வெறுப்பு உள்ளது.
ராணி இறந்தது முதல் தற்போது வரை மன்னர் சார்லஸ்க்கு எதிராக அங்குள்ள மக்கள் கலகக்குரல் எழுப்பி வருவது தொடர்கதையாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு: கட்காரி
“தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது” – தமிழிசை குற்றச்சாட்டு