”நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற”- வைரமுத்து

டிரெண்டிங்

சந்திரயான் வெற்றி பெற்றால் அது இந்தியாவின் வெற்றி அல்ல மானுட வெற்றி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது.

நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17 ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் இறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதன் நேரலைக்காட்சிகளை ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் தொலைக்காட்சியில் காண்பதற்கான லிங்குகளையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் பதிவு ஒன்றை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ளார்.

அதில்,”நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான். நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம்.

லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல்வியல்ல; விஞ்ஞானத் தோல்வி. சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல; மானுட வெற்றி. ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற” என்று தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அடுத்த 3 மணி நேரத்தில் மழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *