பியூட்டி டிப்ஸ்: மந்தமான சூழலில் முகப்பொலிவுக்கு உதவும் தயிர்!

டிரெண்டிங்

வெயிலும் மழையும் கலந்த தற்போதைய சூழ்நிலையில் முகம் பொலிவிழந்தும், தோலில் எரிச்சல், வியர்வை, அரிப்பு போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படும். இந்த நிலையில் உங்கள் சருமம் குளிர்ச்சியாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க தயிர் கலந்து செய்யப்படும் இந்த ஃபேஸ் மாஸ்க் உதவும்.

தயிர் – கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் மற்றும் 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விடவும். பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். உடனடி நிவாரணத்தை உணர்வீர்கள்

தயிர் –  தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்

ஒரு பாத்திரத்தில் துருவிய தர்பூசணி மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி கலவையை உங்கள் முகத்தில் தடவவும். வெயிலில் பாதித்த பகுதிகளிலும் இதைப் பயன்படுத்தலாம். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் பாதிக்கப்பட்ட முகத்துக்கு நிவாரணம் அளிக்கும்.

இந்த இரண்டு ஃபேஸ் மாஸ்க்கும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து முகத்தைப் பளபளப்பாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: கரம் மசாலா, கறி மசாலா… எது பெஸ்ட்?

ஒருவேள வெளிநாடுனு நெனச்சிட்டாரோ : அப்டேட் குமாரு

‘கங்குவா’ டிரெய்லர் ரிலீஸ் தேதி இது தான்!

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் – ரூ.38 கோடி ஒதுக்கீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0