மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) இன்று (டிசம்பர் 21) வியாழன் காலை 11 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது. 12 மணிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
கணினி மற்றும் மொபைல் பயன்பாடு ஆகிய இரண்டு வகைகளிலும் வழக்கமான ட்வீட்களுக்குப் பதிலாக ‘உங்கள் காலவரிசைக்கு வரவேற்கிறோம்’ என்பதை மட்டுமே காட்டி வருகிறது எக்ஸ் தளம்.
தமிழ்நாட்டில் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காக எக்ஸ் தளத்தில் தேடுதல் நடந்து வந்த நிலையில், உலக அளவிலேயே, எக்ஸ் தளம் செயலிழப்பை சந்தித்துள்ளது.
ஒரு மணி நேரத்துக்குள்ளேயே எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று 70 ஆயிரம் பேர் ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். மேலும், இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. எக்ஸ் தளம் செயல்படவில்லை என்று பலர் தங்களது ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இணைய தளங்கள், சமூக தளங்களின் செயல்பாடுகள் பற்றிய உடனடித் தகவல்களை பதிவிடும் தளமான Downdetector -இலும் ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர் என்கிற எக்ஸ் தளம் முடங்கியது பற்றி பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
எக்ஸ் தளம் முடங்குவது இது முதல் முறையல்ல. எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான இந்த எக்ஸ் இயங்குதளம் இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் செயலிழப்பை எதிர்கொண்டது.
இந்தநிலையில், பகல் 12 மணிக்கு மேல் எக்ஸ் தளம் மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. ஒரு மணி நேர முடக்கத்தால் உலகையே உலுக்கி விட்டது எக்ஸ்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடியை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அடுத்த விக்கெட்: ஜெயக்குமார்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பொன்முடி