உலக காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தைப் பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தியும் பரிசுப் பொருட்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் பிரபலங்களின் பிறந்தநாள், நினைவுநாள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றைச் சிறப்பிக்கும் வகையில் தொடர்ச்சியாக டூடுல் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
காதலர் தினத்திற்காக கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில் இரண்டு தண்ணீர் துளிகள் தனித்தனியே வந்து சந்திக்கின்றன. ஆனால் அதில் ஒரு தண்ணீர் துளி மட்டும் வேகமாக வழுக்கிக் கொண்டு கிழே வருகிறது.

இதனை கண்டு சோகமடைந்த மற்றொடு தண்ணீர் துளியும் வேகமாக கீழே வந்து, முதல் தண்ணீர் துளியுடன் சேர்கிற போது அது இதய வடிவில் மாறுவது போல காட்சி அமைந்துள்ளது. இந்த டூடுல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மோனிஷா
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை!
புல்வாமா தாக்குதல்: தியாகத்தை மறக்க மாட்டோம் என மோடி உருக்கம்!