உலகளவில் அதிகம் தேடப்பட்ட நடிகை!

டிரெண்டிங்

2022 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹேர்டு முதலிடம் பிடித்துள்ளார்.

CelebTattler என்ற சர்வதேச இணையதளம் உலக பிரபலங்கள் குறித்து தொடர்ந்து பல சுவாரசியமான செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலை தரவுப் புள்ளிகளுடன் பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது.

அதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹேர்டு முதலிடம் பிடித்துள்ளார்.

இவருக்கும், ஜானிடெப்புக்கும் நடந்த விவாகரத்து தொடர்பான வழக்கு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இவர் மாதத்திற்கு சராசரியாக 5.6 மில்லியன் தடவை ஆம்பர் ஹெர்டு தேடப்பட்டுள்ளார்.

அவர் மீது வழக்கு தொடர்ந்த ’ஜாக் ஸ்பேரோ’ ஜானி டெப் 5.5 மில்லியன் தேடல்களுடன் 2ம் இடம் பிடித்துள்ளார்.

world most search celebrity in google

மூன்றாவது இடத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமான பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் இடம்பெற்றுள்ளார். இவர் ஆண்டுக்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 4.3 மில்லியன் கூகுள் தேடல்களை கொண்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீரர் டாம் பிராடி 4.06 மில்லியன் தேடல்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

5வது இடத்தில் அமெரிக்க நடிகையும், தொழிலதிபருமான கிம் கர்தாஷியனும், ஆறாவது இடத்தில் அமெரிக்க நகைச்சுவை நடிகர் பீட் டேவிட்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இருவரும் கூகுளில் மாதத்திற்கு முறையே 3.4 மில்லியன் மற்றும் 3.2 மில்லியன் தேடல்களை பெற்றுள்ளனர்.

world most search celebrity in google

சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி பல அதிரடி மாற்றங்கள் செய்துவரும் எலோன் மஸ்க் 7வது இடத்தை பெற்றுள்ளார். அவர் ஒரு மாதத்திற்கு 3.19 மில்லியன் கூகுள் தேடல்களை கொண்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

“இனி யாரையும் இழக்கக்கூடாது”: முதல்வர் வேண்டுகோள்!

கமலுக்கு விஜய்சேதுபதி தந்த முத்தம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *