உலக இதய தினமும்… யுவன் சொன்ன அட்வைஸும்!

டிரெண்டிங்

இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 29) இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒருவர் தனது வாழ்வில் ஆரோக்கியமுடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டுமென்றால் அவர் தனது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்குவதிலும், மற்ற உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை வழங்குவதிலும், மனித உடலில் இதயம் முக்கிய பங்கு வகிக்கிறது.

world heart day yuvan says tips for heart health

சமீப காலங்களில் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலகளவில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு நபர் இதய நோயால் இறக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதய நோய் ஏற்படக் காரணம்

மாறிவரும் வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற மற்றும் தவறான உணவுப்பழக்கம், நீண்ட நேரம் உட்கார்ந்த படியே செய்யும் வேலைகள், உடற்பயிற்சியின்மை,

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தூக்கமின்மை, புகைப்பிடித்தல், பரம்பரை அல்லது மரபணு போன்றவற்றால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

world heart day yuvan says tips for heart health

மார்பு வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல், மங்கலான பார்வை மற்றும் அமைதியின்மை ஆகியவை இதய நோய்களுக்கான அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகளின் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

அலட்சியப்படுத்தினால் அதுவே ஆபத்தாக முடிந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டும்

நடைப்பயிற்சி, ஓடுதல், நீச்சல், யோகா, நடனம், உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியைத் தினசரி 45 நிமிடங்களாவது செய்ய வேண்டும்.

இவை இதயத் துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கும், ஆக்ஸிஜன் கிடைக்கவும் உதவியாக இருக்கும்.

world heart day yuvan says tips for heart health

மேலும், சரியான நேரத்திற்குத் தூங்குவது, முறையான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்ப்பது இதய ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும்.

தற்போது ஏராளமானோர் செல்போன்கள், டிவி பார்த்துக் கொண்டே இரவில் தாமதமாகத் தூங்குகின்றனர்.

இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறது.

தினமும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்குக் குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னர் கணினி, செல்போன், டிவி பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும்.

யுவன் சொன்ன அட்வைஸ்

நேற்று (செப்டம்பர் 28) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இளம் இதயங்களைக் காப்போம் என்ற குறும்பட விழாவில் யுவன் சங்கர் ராஜா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர்,

“ஒரு இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அமைதியும், நிம்மதியும் தேவை. ஆனால் பணம், வீடு, சொத்து என தேடி ஓடி இறுதியில் மனநிம்மதியை இழந்து விடுகிறோம்.

இதயத்தைப் பாதுகாக்க அமைதியும், நிம்மதியும் தேவை. இதனை மையமாக வைத்து இந்த குறும்பட விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இளம் வயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்பு அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே, இளம் வயதிலேயே இதயநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

மோனிஷா

நானே வருவேன்: ரசிகர்களின் கருத்து!

எந்த ஊர்வலம், கூட்டத்துக்கும் அனுமதியில்லை : அரசு திட்டவட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.