சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள ஜெங்ஜோ என்ற நகருக்கும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த தொழிற்சாலையில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இப்போது தங்கள் வீடுகளை நோக்கி தப்பி ஓடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, சில பணியாளர்கள் வேலியை தாண்டி ஓடுகின்றனர். தொழிலாளர்கள் எந்த வகையிலும் ஊரடங்கில் சிக்கிக் கொள்ள விரும்பாததால் எப்படியாவது தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் வேலி தாண்டி ஓடுவதாக சொல்கின்றனர் நெட்டிசன்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கனமழை: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னையின் பல பகுதிகளில் மழை: போக்குவரத்து பாதிப்பு!