குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அருள் வந்து ஆடியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டைய மகா நதியின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கெங்கையம்மன் கோயில். விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்ப்பித்த புராணக் கதையை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் வைகாசி 1-ஆம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும்.
அதன்படி வைகாசி 1 ஆம் தேதியான இன்று (மே 15) குடியாத்தம் பகுதியில் கங்கையம்மன் சிரசு திருவிழா மேளதாளத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் சுமார் 1,700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருவிழாவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் திடீரென்று அருள் வந்து ஆடியுள்ளார்.

அவரை அருகில் இருந்த மற்ற காவலர்கள் கீழே விழாமல் பிடித்துக் கொண்டனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
முதல்வர் பதவிக்கு மோதல்: சிவக்குமார், சித்தராமையாவின் அடுத்த மூவ் என்ன?
“கள்ளச்சாராயம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்”: முதல்வர் ஸ்டாலின்