முதல் நாள் திருமணம்: அடுத்த நாள் விவாகரத்து!

Published On:

| By Selvam

ட்விட்டரில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த பெண், 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து பெறப்போவதாக பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி சோஃபி மௌரே என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் திருமண கோலத்துடன் இருக்கும் அவர், தன்னை தானே திருமணம் செய்துள்ளதாக பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவு இணையத்தில் வைரலானது. பலரும் அவரை பாராட்டினர். ஒரு சிலர் தன்னை சுய விளம்பரம் செய்வதற்காக இதுபோன்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார் என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

அடுத்த நாளே சோஃபி, தான் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த புகைப்படத்தை டேக் செய்து விவாகரத்து பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் சோஃபி விவகாரத்து பெறப்போவதாக அறிவித்துள்ளதை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்தும், சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

செல்வம்

காவல் மரணங்கள் : இழப்பீட்டுத் தொகை உயர்வு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!