யோகாசனம் செய்யும் போது ஆற்றில் விழுந்த பெண் ஒருவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயற்கையான சூழலில் யோகா செய்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் சிசா மேரி என்ற பெண் சற்றே வித்தியாசமாக ஆற்றின் மீதுள்ள சிறிய மரப்பாலத்தில் யோகா செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
யோகாசனத்தை அவர் முழுமையாக செய்து முடிப்பதற்குள் எதிர்பாரா விதமாக ஆற்றில் விழுந்த பழைய வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ முதலில் சிசா மேரியால் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த வீடியோ குறித்து அவர் கடந்த 2017 ஆம் ஆண்டே” நான் இறுதியாக எனது காருக்கு திரும்பியபோது, இதற்கு முன்பு என் வாழ்க்கையில் எப்போதும் இல்லாத அளவுக்கு சிரித்தேன்” என்று தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில் , இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவிற்கு தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் “ யோகா செய்யுங்கள் ஆனால் அதுவே உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத படி கவனமாக செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் “ இது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட வீடியோ போல் இருக்கிறது…நீங்கள் இப்போது நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிராவிட் வேண்டாம்: பயிற்சியாளரில் மாற்றம் வேண்டும்…ஹர்பஜன் சிங் கோரிக்கை!
“ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும்”: கிருஷ்ணன் உண்ணி
ஒரு ஓட்டுக்கு 18 பரிசுகள்: கட்டுக்கடங்காத ஈரோடு தேர்தல் அட்டகாசம்!