இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு பெண் மற்றொரு வாகனத்தில் சென்றவரை எட்டி உதைப்பதும், அப்போது அந்த பெண் கீழே விழுவதுமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. ஒவ்வொருவரின் செயல்வினைக்கும் ஏற்றாற் போல பலன் கிடைக்கும். அதனை கர்மா என்று சொல்வார்கள். அதாவது நல்லது செய்தால் நல்லது நடக்கும், தீயது செய்தால் தீமை நடக்கும்.
இப்படி கர்மாவை குறிப்பிட்டுத்தான் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் சென்றுகொண்டிருக்கிறது. அதில் ஒரு வாகனத்தின் பின் இருக்கையில் பச்சை நிற உடை அணிந்து ஒரு பெண் அமர்ந்துகொண்டு பயணிக்கிறார். அவர் அருகில் சென்றுகொண்டிருக்கும் இரு சக்கர வாகனத்தைக் கீழே தள்ளி விடும் விதமாக எட்டி உதைக்கிறார். ஆனால் அந்த வாகனம் கடந்துவிட, எட்டி உதைக்கும் போது ஒரு பக்கமாக சாய்ந்ததால் அந்த பெண் கீழே விழுந்துவிடுவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இதுதான் உடனடி கர்மா என்று கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்!
பிரியா
அதிமுக பொதுச்செயலாளர்: சசிகலா மனு விசாரணை!