மார்கழி பிறந்துவிட்டது. இனி, தலைமுடியில் தொடங்கி பாதங்கள் வரை ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால், சருமத்தில் வறண்ட தன்மை, கூந்தலில் பிளவு, பாதங்களில் வெடிப்பு என வரிசை கட்டும். இந்தப் பிரச்சினைகளைக் கடந்து குளிர்காலத்தை அழகாக்க இதோ சில டிப்ஸ்…
இந்த சீசனில் எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் லைட் மாய்ஸ்சரைசர், நார்மல் சருமத்துக்காரர்கள் மீடியம் மாய்ஸ்சரைசர், வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்சரைசர் எனப் பயன்படுத்தினால், டிசம்பரை சமாளிக்கலாம்.
குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடித்தால், அடிக்கடி ரெஸ்ட் ரூம் போக வேண்டுமே என்று தயங்காமல், வழக்கம்போல உடம்புக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தைப் பாதுகாக்கும்.
இரவு தூங்குவதற்கு முன்பு முகத்துக்கு ‘ஓவர் நைட் மாய்ஸ்சரைசர்’ க்ரீம் தடவுங்கள். மறுநாள் காலையில் முகம் வறண்டு போகாமல், கோடுகள் விழாமல் இருக்க இந்த மாய்ஸ்சரைசர் உதவும்.
கைகள், முட்டி ஆகிய இடங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்க தேங்காய் எண்ணெயையும் பாதாம் எண்ணெயையும் சரிசமமாக கலந்து தடவுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு மிதமான வெந்நீரில் கழுவுங்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படி செய்தால், கை, கால் முட்டிகளில் உள்ள சொரசொரப்பு நீங்கி, அந்த இடங்கள் மிருதுவாகும்.
ஒரு துண்டு பப்பாளியுடன், ஒரு துண்டு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்துப் பிசைந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசுங்கள். தேனும் வாழைப்பழமும் சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். பப்பாளி உங்கள் சருமத்துக்கு பளிச் நிறம் கொடுக்கும்.
பொடித்த பாதாம் பவுடருடன், காய்ச்சாத பாலை தேவையான அளவுக்குச் சேர்த்து விழுதாக்குங்கள். உடம்பில் சொரசொரப்பாக இருக்கும் பகுதிகளில் பேஸ்ட்டைத் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவினால், சொரசொரப்பு மறையும்.
காம்பினேஷன் சருமம் உள்ளவர்கள் தயிரையும் மோரையும் சம அளவு கலந்து, பஞ்சினால் தொட்டு முகம் முழுக்க தடவி காய விடுங்கள். கொஞ்சம் நேரம் விட்டு மறுபடியும் எனப் பலமுறை செய்யுங்கள். அதிகப்படியாக சுரக்கும் எண்ணெய்ப் பசை குறையும். சருமம் வறண்டு போகும் பிரச்சினையும் சரியாகும்.
சிலருக்குப் பனிக்காலத்தில் உடம்பு முழுக்க தோல் உரிந்து அரிப்பெடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் குளித்து முடித்ததும் சுத்தமாகத் துவட்டிவிட்டு, பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவலாம். இப்படி இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து செய்தால், சருமம் மிருதுவாகும். அரிப்பு எடுக்காது.
தலைமுடி வறண்டு இருந்தால் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை லேசாக சூடு செய்யுங்கள். அதோடு முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, ஐந்து நிமிடங்கள் தலையில் தடவி, வாஷ் பண்ணுங்கள். கூந்தல் வறண்டும் போகாது, உடைந்தும் போகாது.
தேங்காய் எண்ணெயைத் தலை முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். தலைக்கு சீயக்காய்த்தூளும், உடம்புக்குப் பச்சைப்பயிறு பொடியும் போட்டுக் குளியுங்கள். வாரத்துக்கு ஒரு தடவை இப்படி செய்தால், அந்த வாரம் முழுக்க சருமம் சாஃப்ட்டாக இருக்கும்.
பாத வெடிப்பு பிரச்சினையும் இந்த சீசனில் ஏற்படும். இதுக்கு, ‘சாலி சிலிக் ஆசிட்’ கலந்த க்ரீம்களை தடவினால், ஒரு வாரத்தில் பாத வெடிப்புகள் சரியாகி விடும்.
பனியில் உதடுகள் வெடித்துப்போனால், கிளிசரின், வைட்டமின் ‘ஈ’ ஆயில் அல்லது வெண்ணெய் தடவுங்கள். உதடுகள் மென்மையாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கொம்பன் தென் மாவட்டத்துல எறங்கிட்டான் மாமா: அப்டேட் குமாரு
ஒரே பாரதம் உன்னத பாரதத்திற்கு காசி தமிழ் சங்கமம் வலு சேர்க்கிறது: பிரதமர் மோடி
பலமான யு மும்பாவை வீழ்த்தி… முத்தான 3-வது வெற்றியை பதிவு செய்யுமா தமிழ் தலைவாஸ்?
INDVsSA: உனக்கு 4 எனக்கு 5… பிங்க் ஜெர்சி செண்டிமெண்டை தவிடு பொடியாக்கிய இந்தியா