ஒரே நிறம் கொண்ட ஹெல்மெட் காரணமாக தன் கணவர் என்று நினைத்து வேறொருவரின் பைக்கில் பெண் ஒருவர் ஏறி சென்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ரானேபென்னூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு, இருவர் தங்களது மனைவிகளுடன் கிட்டத்தட்ட ஒரே நிறமுடைய இரண்டு பைக்குகளில் கடந்த 8ம் தேதி வந்தனர்.
அங்கு பின்னால் உள்ளவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், மனைவியரும் ஹெல்மெட் அணிந்து வந்திருந்தனர்.
பெட்ரோல் நிரப்பியதும் ’ஏறு’ என்று மனைவியை ஒருவர் அழைத்துள்ளார். அப்போது போனில் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் பைக்கில் ஏறி பட்டென அமர, சட்டென பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார்.
தன் வீட்டுக்கு வந்தததும் பைக்கை கணவர் நிறுத்திவிட்டு மனைவியை இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது பின்னால் இருந்தவர் “இது நம்ம வீடு இல்லையே?” என்று கூற, தன் மனைவியின் குரல் வினோதமாக கேட்கிறேதே? என்று கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போது தான் இவ்வளவு நேரம் தன் பின்னால் அமர்ந்து வந்தவர் தன் மனைவி இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
உடனடியாக அந்த பெண்ணுடன் பெட்ரோல் நிலையத்திற்குத் திரும்பி, அங்கே நின்ற தன் ரியல் மனைவியிடம் நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார். அதே போல அந்த பெண்ணும் தன் கணவரிடம் விளக்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து நால்வரும் தங்களது ஜோடிகளுடன் அங்கிருந்து சிரித்தபடியே சென்றுள்ளனர்.
பைக்கில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணிவது அவசியம். எனினும் ஹெல்மெட்டால் நிறத்தால் குழம்பிய மனைவி வேறொருவருடன் சென்ற சம்பவம் கர்நாடகவில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இடைத்தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
“இது ராகுலுக்கே சங்கடம் தான்”: அசோக் கெலாட் உரை குறித்து அண்ணாமலை