நீரிழிவு நோயாளிகளுக்கு பழங்கள் சாப்பிடுவது குறித்து நிறைய சந்தேகமும், பயமும் உண்டு. பழங்களே சாப்பிடக் கூடாது என்றும் சிலர் அறிவுரை சொல்கிறார்கள்.
முதலில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், எல்லா பழங்களிலுமே சர்க்கரை அளவு அதிகம். ஒரு காய், பழமாக மாறும்போது அதில் சர்க்கரைச்சத்து அதிகமாகிவிடும்.
வாழைக்காயில் சர்க்கரை குறைவு; வாழைப்பழத்தில் அதிகம். மாங்காயில் குறைவு; மாம்பழத்தில் சர்க்கரை அதிகம்.
பழங்களில் இருக்கும் முக்கிய சத்தே நார்ச்சத்தும் சர்க்கரையும்தான். ஜூஸாக மாறும்போது நார்ச்சத்து போய்விடுகிறது. அது வெறுமனே சுகர் சிரப்தான். அதனால் ஜூஸாக குடிக்கவே கூடாது.
சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள பழங்கள் என்றால் ஆப்பிள், கொய்யா அளவோடு சாப்பிடலாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதபட்சத்தில் பழங்களைத் தவிர்ப்பதே நல்லது.
மாம்பழம், வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம். பலாப்பழத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகம். அதற்காக வாழ்க்கை முழுவதும் பழங்களே சாப்பிடக் கூடாதா என்று சிலர் கேட்பார்கள்.
மாம்பழ சீசனில் ஊரே மாம்பழம் சாப்பிடும்போது நாம் மட்டும் சாப்பிடாமல் ஏக்கத்துடன் இருப்பது கஷ்டமாகவே இருக்கும். 4 இட்லி சாப்பிடுகிறீர்கள் என்றால் 2 இட்லியுடன் 2 மாம்பழத் துண்டுகள் சாப்பிடலாம்.
உணவின் மூலம் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு மட்டுமே போதாது. இவையெல்லாம் ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்றாகவே உதவி செய்யும்.
நேரத்துக்குச் சாப்பிடுவது, சரியான உணவுமுறையைப் பின்பற்றுவது, போதுமான உடற்பயிற்சிகள், மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொள்வது போன்ற கூட்டு நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே நீரிழிவை சரியாகப் பராமரிக்க முடியும்” என்கிறார்கள் நீரிழிவு சிறப்பு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சப்பாத்தி
இதெல்லாம் வெளியில சொன்னா சிரிச்சிருவாங்க… அப்டேட் குமாரு