ஹெல்த் டிப்ஸ்: யாரெல்லாம் எக்ஸ்-ரே (X-ray) எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்?

Published On:

| By christopher

Who should avoid getting X-rays?

இன்று எல்லாவற்றுக்கும் சுய மருத்துவம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி தாமாகவே மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதுபோல, எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனைகளையும் செய்து பார்க்கிறார்கள்.

உதாரணத்துக்கு, சளி இருப்பதற்காக போன வாரம் சிடி ஸ்கேன் செய்திருப்பார்கள். ஒரு வாரம், பத்து நாட்கள் கழித்து, அந்தப் பிரச்னை சரியாகிவிட்டதா என்பதை உறுதிபடுத்த அவர்களாகவே இன்னொரு ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். நினைத்தபோதெல்லாம் செய்து பார்ப்பதற்கு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் போன்றவை ரத்தப் பரிசோதனை போன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் கதிரியக்க சிகிச்சை மருத்துவர்கள்.

”எக்ஸ்-ரே என்பது ‘அயனைஸிங் ரேடியேஷன்’ (Ionizing Radiation) எனப்படும் ஊடுருவும் ஆற்றல் அதிகம் கொண்ட கதிர்வீச்சு என்பதில் சந்தேகமில்லை. டிஎன்ஏ எனப்படும் நம் மரபணுக்களைச் சேதப்படுத்தும் தன்மை கொண்டது எக்ஸ்-ரே.

டிஎன்ஏ பாதிக்கப்படுவதை டிஎன்ஏ பிறழ்வு (DNA mutation ) என்று சொல்வோம். இந்தச் சேதத்தின் பெரும்பகுதியை நம் உடலால் சரிசெய்துவிட முடியும் என்றாலும் சில சமயங்களில் இந்த டிஎன்ஏ பிறழ்வு தொடரவும் வாய்ப்புகள் உண்டு. அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இது சாதாரண எக்ஸ்-ரேவுக்கு பொருந்தும்” என்பவர்கள் யாரெல்லாம் எக்ஸ்-ரே எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளனர்.

“கர்ப்பம் உறுதியானவர்கள் மற்றும் கர்ப்பம் தரித்திருக்கலாம் என சந்தேகப்படும் பெண்கள் எக்ஸ்-ரே எடுப்பதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

குழந்தைகளுக்கு எக்ஸ்-ரே, ஸ்கேன் செய்யவேண்டி வரும்போது ஒன்றுக்கு இருமுறை யோசித்து, செகண்ட் ஒப்பீனியன் பெற்றுக்கொண்டு செய்வதில் தவறில்லை.

குழந்தைகளின் டிஎன்ஏ ரொம்பவும் சென்சிட்டிவ்வானது. அடிக்கடி எக்ஸ்-ரே, ஸ்கேன் செய்வதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ரிஸ்க், பெரியவர்களுக்கு 4 சதவிகிதம் என்றால், குழந்தைகளுக்கு அது ஒரு சதவிகிதம் இருக்கக்கூடும்.

மிகமிகக் குறைந்த அளவு கதிர்வீச்சுகூட குழந்தைகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும். அதற்காக குழந்தைகளுக்கு எக்ஸ்-ரேவே எடுக்கக்கூடாது என அர்த்தப்படுத்திக்கொள்ளவும் கூடாது.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, தேவை இருக்கும் பட்சத்தில், மருத்துவரின் பரிந்துரையோடு அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதில் தவறில்லை” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புலாவ்

டிஜிட்டல்  திண்ணை:  எடப்பாடி – விஜய்… 2026 மாஸ்டர் பிளான் இதுதான்!

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… கடும் போக்குவரத்து நெரிசல்!

மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share