இந்திய ரூபாயைக் குறிக்கும் ₹ என்ற சின்னத்தை உருவாக்கியவரும் தமிழகத்தை சேர்ந்தவர்தான். அவரின் பெயர் உதய்குமார் தர்மலிங்கம்.
இந்திய நாணயத்தை மதிப்பிட ரூபாய் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திய நாணயத்தின் சின்னத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. தொடர்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய ரூபாய் குறியீடு வடிவமைக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து இந்தப் போட்டியில் சுமார் 3,000 வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அந்த 3 ஆயிரம் பேரில் தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் தர்மலிங்கம் உருவாக்கிய சின்னம்தான் தேர்வானது. who is designer of ₹ ?

வரலாற்றில் ஒருமுறை மட்டுமே ஒரு நாட்டின் நாணயச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும் என்பது விதி. இந்த ஒற்றைச் சின்னம் தான் உலகமெங்கும் நமது பணத்தின் அடையாளமாக பார்க்கப்படும். டாலர் போல நமது பணமும் வேல்யூ கூடியதாக இருந்திருந்தால், இப்போது இந்த சின்னம் உலகம் முழுக்க பாப்புலராகியிருக்கும்.
இந்திய மொழிகளை எழுத உதவும் தேவநாகரி என்ற எழுத்து முறையில் “Ra” மற்றும் ரோமன் எழுத்து “R”-ஐப் பயன்படுத்தி உதயகுமார் ₹ என்ற சின்னத்தை உதயகுமார் வடிவமைத்தார். இந்தச் சின்னம் தான் தற்போது வரை இந்தியப் பணத்தை குறிக்க பயன்பட்டு வருகிறது.
இவர் சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த உதயகுமார் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மும்பை ஐஐடி-யில் தொழில் வடிவமைப்பு பிரிவில் விஷுவல் கம்யூனிகேஷன் முதுகலைப் பட்டத்தையும், பி.எச்டி பட்டத்தையும் பெற்றுள்ளார். பின்னர், கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். இவர், ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ தர்மலிங்கத்தின் மகன் என்பது கூடுதல் தகவல்.
உதயகுமார் வரைந்த குறியீடு இந்திய ரூபாய் சின்னமாக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டதும், அவர் தனது குடும்பத்தினருடன் அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரை 2010ஆம் ஆண்டு நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த சின்னத்தை இந்திய அரசு தேர்வு செய்து அறிவித்ததும், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகள் உதயகுமாரின் பேட்டியை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் அரசின் 2025-26ஆம் ஆண்டு நிதி அறிக்கைக்கான இலச்சினையில் உதய்குமார் வரைந்த ரூபாய் சின்னத்திற்கு (₹) பதிலாக ரூ என்ற தமிழ் எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதயகுமார் ரியாக்சன்!
இதுதொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழக அரசு ரூபாய் அடையாள குறியீட்டை மாற்றியதற்கு உரிய காரணம் ஏதாவது இருக்கும். எனக்கு இதில் வருத்தமோ கவலையோ இல்லை” என உதயகுமார் தெரிவித்துள்ளார்.