அனைவருக்குமே டிரெண்டில் இருக்கும் ஆடைகளை அணிய ஆசை இருக்கும். ஆனால், அவற்றை எப்படி ஸ்டைல் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட், ‘ஆலியா கட் குர்தா’.
இந்த குர்தாவில் நடுவில் உள்ள ஃபிரில், பருமனாக இருப்பவர்களை இன்னும் சற்று பருமனாகக் காட்டும். எனவே, பருமனாக இருப்பவர்கள் காட்டன் மெட்டீரியலில் ஆலியா கட் ஆடைகளைத் தேர்வு செய்யாமல் ஜார்ஜெட் அல்லது ஷிஃபான் துணிகளில் தேர்வு செய்யலாம்.
உயரம் குறைவாக இருப்பவர்கள், அனார்கலி வகை ஆடைகள் அணியும்போது இன்னும் சற்று உயரம் குறைவாகத் தெரிவார்கள். அதனால் ஹீல்ஸ் அணிவது அவசியம்.
உயரமாக இருப்பவர்கள் அனார்கலி ஆடைகளைத் தேர்வு செய்யும்போது கணுக்கால் வரை நீளமுள்ளவற்றை அணியலாம்.
பருமனாக இருப்பவர்கள் மற்றும் தொப்பை இருக்கிறது என வருத்தப்படுபவர்கள் பெப்லம் டாப்கள் (Peplum tops) தேர்வு செய்யலாம்.
கூடுமானவரை முட்டி அளவிலான ஆடைகள் மற்றும் 3/4 ஸ்லீவ்கள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கு சாஃப்ட் சில்க், சிந்தெடிக், க்ரேப் சில்க் போன்ற மெட்டீ ரியல்கள் பொருத்தமாக இருக்கும்.
ஒல்லியாக இருப்பவர்கள் ஆர்கன்ஸா (Organza), பாகல்புரி காட்டன் (Bhagalpuri cotton) போன்ற துணி வகைகளைத் தேர்வு செய்யலாம்.
உடல் பருமனாக இருப்பவர்கள் ஜார்ஜெட் மற்றும் ஷிஃபான் வகை சேலைகளை அணியலாம்.
கைகள் ஒல்லியாக இருப்பவர்கள் பிளவுஸ் தைக்கும்போது பஃப் அல்லது ஃப்ரில் வைத்த ஸ்லீவ்களை தேர்வு செய்யலாம்.
அனார்கலி, ஆலியா கட் போன்ற ஆடைகளுக்கு லெகின்ஸ், கேதரிங் பேன்ட் நல்ல சாய்ஸ்.
சைடு ஸ்லிட் இருக்கும் டாப் களுக்கு பென்சில் ஃபிட் பேன்ட் மற்றும் ஆங்கிள்லெங்த் பேன்ட் அணியும்போது உடல் மற்றும் கால் பகுதிகள் பருமனாகத் தெரியாது.
பெப்லம் டாப், கிராப் டாப் (Crop top) ஆகிய ஆடைகளுக்கு பலாஸோ பேன்ட் வகைகள் அருமையாகப் பொருந்தும்.
கிராப் டாப் மற்றும் பலாஸோவுடன் ஷ்ரக் அணிந்தால் ஸ்டைலாக இருக்கும். பட்டியாலா பேன்ட் வகைகளை பெப்லம் மற்றும் சல்வார்களுக்கும் மேட்ச் செய்யலாம்.
தற்போது டிரெண்டில் இருக்கும் ஹரெம் பேன்ட் (Harem pants ) பாரம்பர்யம் மற்றும் மாடர்ன் என இரண்டு ஆடைகளுக்குமே அணியலாம் என்பது கூடுதல் சிறப்பு.
எந்த ஆடையாக இருந்தாலும், எந்த கலராக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி அணிகலன்கள், காலணிகள், ஹேண்ட் பேக் ஆகியவற்றை மேட்ச் செய்வது அவசியம் என்ற கோல்டன் ரூலை மட்டும் எப்போதும் கண்டிப்பாக மறந்துவிடாதீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: காலை உணவு திட்டம் விரிவாக்கம் முதல் எடப்பாடி ஆலோசனை வரை!
கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டுப் பொங்கல்
இந்தியன் தாத்தாவால் கூட பேச முடியாத ஊழல் : அப்டேட் குமாரு
INDvsZIM : தடுமாறிய ஜிம்பாவே… தொடரை கைப்பற்றியது இந்தியா!