கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த பாலிவுட் உலகின் கவனத்தையும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் – ராதிகா திருமணம் கொண்டாட்ட நிகழ்வுகள் ஈர்த்து வருகின்றன. அவர்களின் திருமணம் வரும் 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
அதற்காக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் திருமண கொண்டாட்டத்தில் உள்ளூர் நடிகர்கள், சர்வதேச பிரபலங்கள் வரை என பலரும் பங்கேற்று வருகின்றனர்.
சமீபத்தில் உலகக்கோப்பை வென்ற மும்பை மண்ணின் மைந்தர்களான கேப்டன் ரோகித்சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் திருமண கொண்டாடத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
இந்த நிலையில் அவர்களின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மும்பை விமான நிலையத்தில், முகமூடி அணிந்த ஆணும் பெண்ணும் பவுன்சர்களுடன் வலம் வந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர்கள் யார் என்று தெரியாத நிலையில், ஹாலிவுட் பிரபலங்கள் என்று ஒரு சிலரும், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஜோடி என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 2021 சட்டமன்ற தேர்தலை விட அதிக வாக்குப்பதிவு!