ஹெல்த் டிப்ஸ்: மழைக்காலக் குளியலுக்கு ஏற்றது வெந்நீரா? குளிர்ந்த நீரா?

டிரெண்டிங்

குளியல்…சிலருக்கு அலாதி ப்ரியம். சிலருக்கு அலர்ஜி. பல மணி நேரம் குளிப்பவர்களும் இருப்பார்கள். விடுமுறை நாள்களில் குளியலுக்கு விடுமுறை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று பெரும்பாலானவர்கள் வீடுகளில் வாட்டர் ஹீட்டர் இருக்கிறது. அதில் குளித்தே பழகியவர்கள் கோடைக்காலத்திலும் வெந்நீரிலேயே குளிக்கிறார்கள். இது தவறான பழக்கம்.

அதிக சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிர், மழை காலங்களில் மட்டும் அதிக குளிர்ந்த நீராகவும் இல்லாமல், அதிக சூடாகவும் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். வெந்நீரில் குளிப்பதை இயன்றவரை தவிர்ப்பதே நல்லது.

பொதுவாக, உடலில் தண்ணீர் பட்டு, குளிரான அந்தச் சூழல் பழகிய பின்னரே தலையில் தண்ணீர் பட வேண்டும். இதனால்தான் குளிக்கும்போது முதலில் காலில் தண்ணீர் ஊற்றச் சொல்வார்கள்.

பின்பு அப்படியே கீழிருந்து மேல் நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, கடைசியில் தலையில் தண்ணீர் ஊற்றுவோம். ஆற்றிலோ, குளத்திலோ குளிக்கும்போது அப்படித்தான் குளிப்போம். அதுதான் சரியான குளியல் முறை.

சிலர் வெயிலில் அலைந்து திரும்பிய பிறகு, வெப்பம் தணிப்பதற்காகக் குளிர்ந்த நீரைத் தலையில் தெளிப்பார்கள் அல்லது தலையையே கழுவுவார்கள். இதுவும் தவறு.

உடனே மண்டைப்பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படலாம்.

உடல் களைப்பாக இருக்கும்போதோ அல்லது ஜாகிங் சென்றுவிட்டு வந்த பிறகோ வெந்நீரில் குளித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும்.

ஆனால், வெந்நீரைவிட குளிர்ந்த நீரில் குளிக்கும்போதுதான் தசைகளின் மீது ஏற்பட்ட அழுத்தம், காயம் ஆகியவை சரியாகி வலி நீங்கும். புத்துணர்வும் கிடைக்கும். எனவே, வெந்நீர் குளியலை விட குளிர்ந்த நீர்க் குளியலே சிறந்தது.

மழைக்காலத்தில் வெந்நீரில் குளிக்கும்போது அந்தக் கணத்தில் இதமான உணர்வு கிடைப்பது போல் தோன்றும். ஆனால், நிரந்தரமான பலன் குளிர்ந்த நீரில்தான் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கோதுமை இட்லி

ஸ்டாலின் செய்வது அநீதி : ராமதாஸ் காட்டம்!

அருந்ததியர் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆ.ராசா கோரிக்கை!

ஸ்டாலின் – திருமா… தனியாக நடந்த சந்திப்பில் நடந்தது இதுதான்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *