எல்லோருக்கும் எளிதாகவும் வருடத்தின் எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம். தினமும் பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து ஆலோசகர்களும் அறிவுறுத்தும் நிலையில், பலரின் சாய்ஸும் வாழைப்பழமாகவே இருக்கிறது.
தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை கடமையாகவே பின்பற்றுவோர் உண்டு. வாழைப்பழம் சாப்பிட்டால்தான் காலைக்கடனை சிரமமின்றி கழிக்க முடிவதாக உணர்வோரும் உண்டு. இந்த நிலையில் யாருக்கு… எந்தப் பழம் ஏற்றது?
கற்பூரவல்லி: கர்ப்பிணிகளுக்கான பழம் என்றே இதைச் சொல்லலாம். இதில் உள்ள ஃபோலிக் அமிலம், குழந்தைகளின் மூளை மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவும். பீரியட்ஸ் நாட்களில் ஏற்படும் வலியைப் போக்கும் தன்மை கொண்டது கற்பூரவல்லி. குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஸ்நாக்ஸில் கற்பூரவல்லி பெஸ்ட் சாய்ஸ்.
ரஸ்தாளி: இதில் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும். இதுவும் இன்ஸ்டன்ட் எனர்ஜியைக் கொடுக்கும். இதில் நார்ச்சத்து சற்று அதிகம் என்பதால் மலச்சிக்கல் உள்ளோர் எடுத்துக்கொள்ளலாம்.
செவ்வாழை: எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பாற்றலுக்கும் சிறந்த பழம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பார்வைத் திறன் பிரச்னை உள்ளவர்களுக்கும் நல்லது. வாரத்தில் ஒரு முறையோ, இரு முறையோ மட்டும் ஒரு செவ்வாழை எடுத்துக்கொள்ளலாம்.
மலை வாழை: இந்தப் பழத்துக்கென பிரத்யேக மணமும் சுவையும் உண்டு. ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவக்கூடியது. நார்ச்சத்தும், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸும் அதிகம். நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பூவன் பழம்: இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, செரிமானத்தைச் சீராக்கக்கூடியது. எல்லாருக்கும் ஏற்றது.
ஏலக்கி: மற்ற வாழைப்பழங்களோடு ஒப்பிடுகையில், அளவில் சிறிய பழம் இது. லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது என்பதால், சர்க்கரை நோயாளிகளும் (ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில்) எடுத்துக்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நாவல் பழ அல்வா
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக மோடியின் கே.கே. பிளான்… அதிர்ச்சியில் ஆர்.என்.ரவி
வயநாடு நிலச்சரிவு… மற்றொரு தமிழர் பலி… இரவிலும் தொடரும் மீட்பு பணி!