ஹெல்த் டிப்ஸ்: ‘பஃபே’வுக்குச் சென்றால் எந்த வரிசையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது?

Published On:

| By Selvam

“பஃபே விருந்தில் சாப்பிடும்போது முதலில் சூப்தான் குடிக்க வேண்டும். காரணம், பசியைத் தூண்டும் என்பதுதான். நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியில் இருந்தாலோ, உங்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகம் சாப்பிட்டுவிடக் கூடாது என நினைத்தாலோ, சூப்புக்கு அடுத்து சாலட் அல்லது காய்கறி பொரியல், கூட்டு போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.

சூப் சாப்பிட்டதும் பிரியாணியோ, வேறு சாத வகைகளோ சாப்பிட்டால், வயிறு நிறைந்து விடும். சாலட் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும், உங்கள் வயிற்றில் இடமிருக்காது. எனவே, முதலிலேயே காய்கறிகளைச் சாப்பிட்டு விடுவதுதான் சரி.

அதாவது ஒரு தட்டில் சாலட், காய்கறி பொரியல், அவியல், குருமா போன்றவற்றை ஒவ்வொரு கப் அளவுக்கு எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள். அதன் பிறகு சாதம் சாப்பிடும்போது உங்களால் அதிகம் சாப்பிட முடியாது. கலோரிகள் ஏறாமலிருக்கும். ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் போன்றவற்றை கடைசியாகச் சாப்பிடுங்கள்.

இன்று நிறைய பஃபே விருந்துகளில் சாட் வகைகள்கூட பரிமாறப்படுகின்றன. சூப், சாலட், மெயின் கோர்ஸ், அதன் பிறகு சாட் என்ற வரிசையில் சாப்பிடுங்கள். ஸ்வீட்டும் ஐஸ்க்ரீமும் கட்டாயம் சாப்பிட வேண்டியதில்லை. அதேசமயம் தவிர்க்க வேண்டாமே என நினைத்தால் ஒன்றிரண்டு ஸ்பூனுடன் நிறுத்திக்கொள்வது சிறந்தது” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: சாதம் வடித்த கஞ்சி – தலைமுடிக்குப் பயன்படுத்துவது சரியா?

டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் தேர்வுக் கூட்டம் முதல் 11 மாவட்டங்களில் கனமழை வரை!

கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்பாடுகள் : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.. பனையூரில் நிவாரணம் வழங்கிய விஜய்

மின்னம்பலம் செய்தியை எடுத்துச் சொன்ன அண்ணாமலை : தூர்வாராத சாத்தனூர் டேம்!