பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற மாய்ஸ்ச்சரைசர் எது?

Published On:

| By Selvam

நம் உடலின் சத்துகளுக்காக உணவு உட்கொள்வது போல, நம் சருமத்துக்கும் கொழுப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து தேவை. மாய்ஸ்ச்சரைசரில்தான் இந்த இரண்டு சத்துகளும் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன.

இந்த மாய்ஸ்ச்சரைசரை தேர்ந்தெடுக்கும்போதும் உங்களின் சருமத்தின் தன்மைக்கேற்றவாறு முடிவெடுக்க வேண்டும். சில மாய்ஸ்ச்சரைசரில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் இருக்கும். சில மாய்ஸ்ச்சரைசரில் கொழுப்புச்சத்து அதிகமாகவும், நீர்ச்சத்து குறைவாகவும் இருக்கும்.

எனவே, எண்ணெய்ப்பசை கொண்ட சருமம் கொண்டவர்கள் நீர்ச்சத்து அதிகம் கொண்ட மாய்ஸ்ச்சரைசர்கள் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் அதிகம் கொழுப்புள்ள மாய்ஸ்ச்சரைசரை உபயோகிக்கலாம். இப்போதெல்லாம் மாய்ஸ்ச்சரைசரிலும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ரெட்டினால் போன்ற சிறப்பான பொருட்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஸ்பெஷல் விஷயங்கள் சேர்க்கப்படும் மாய்ஸ்ச்சரைசர் இன்னும் பலன் தரக்கூடியதாக நமக்கு கூடுதல் உதவிகளையும் செய்கிறது.

சருமத்துக்குத் தேவையான சத்துகள் உணவின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதைத் தாண்டி மாய்ஸ்ச்சரைசர் மூலம் சருமத்துக்கு நேரடியாகவும் கிடைக்கிறது. க்ளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங் என்கிற இந்த மூன்று வேலைகளையுமே வழக்கமாகச் செய்து வந்தால் சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா பாயசம்

மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்தது ஏன்?

’எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?’ : அண்ணாமலைக்கு ஜெயக்குமார் காட்டமான பதில்!

இந்த வருசத்துல என்ன சாதிச்சீங்க : அப்டேட் குமாரு

பெண்கள் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா… ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share