பியூட்டி டிப்ஸ்: முகத்துக்கு சோப் உபயோகிக்கக்கூடாதா?

டிரெண்டிங்

முகத்துக்கு ஃபேஸ்வாஷ்தான் உபயோகிக்க வேண்டும், சோப் போடக்கூடாது என்கிறவர்கள் சிலருண்டு… அது உண்மையா?

“நம்முடைய சருமம் அமிலத்தன்மை கொண்டது. அமிலத்தன்மையின் அளவு 4.5 முதல் 5.5 வரை இருக்கும். நம் உடல் வெளியிடும் எண்ணெய்ப் பசையை ‘சீபம்’ என்று சொல்வோம்.

அதைச் சுத்தப்படுத்துவதற்கு காரத்தன்மையுள்ள ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் சோப். அதாவது எண்ணெய் என்கிற அமிலத்தைச் சுத்தப்படுத்த சோப் என்கிற காரத்தை நாம் பயன்படுத்துகிறோம்.

உடலின் சருமத்தைச் சுத்தப்படுத்த அது போதுமானது. ஆனால், முகத்திலுள்ள சருமம் மிகவும் மென்மையானது. அதனால் முகத்துக்கு சோப் பயன்படுத்தும்போது முகச் சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசை முழுவதையும் சோப் நீக்கிவிடும். அதன் காரணமாக முகம் வறண்டும், சுருக்கங்களுடனும் காட்சியளிக்க வாய்ப்புகள் உண்டு. இது வயதாக, ஆக வெளியில் தெரியும்.

அதனால்தான் முகத்துக்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. அதில் சோப் அளவுக்கு காரத் தன்மை இருக்காது. சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி அழுக்குகளை வெளியே கொண்டு வரும்.

ஆனாலும் சிறிதளவு எண்ணெய்ப் பசையை பேலன்ஸ் செய்துகொண்டே இருக்கும். அதாவது முகத்திலுள்ள ஒட்டுமொத்த எண்ணெய்ப் பசையையும் அது நீக்குவதில்லை. இதற்காகவே ஃபேஸ் வாஷ் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது.

பிரைட்டனிங் ஃபேஸ்வாஷ், பருக்கள் உள்ளவர்களுக்கான ஃபேஸ்வாஷ், ஆன்டி ஏஜிங் ஃபேஸ் வாஷ் என ஃபேஸ்வாஷில் நிறைய வகைகள் உள்ளன. அவரவர் சருமத்துக்கேற்றதைத் தேர்ந்தெடுக்கலாம்.

பொதுவாகச் சொல்வதென்றால் சோப்பைவிட ஃபேஸ்வாஷ் நிச்சயம் சிறந்ததுதான். அதே நேரம், பிரத்யேக சோப்புகளும் உள்ளன.

அதிகபட்ச சரும வறட்சி உள்ளவர்களுக்கு மாய்ஸ்ச்சரைசர் அளவு அதிகமாக உள்ள சோப், மங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு அதற்கான பிரத்யேக சோப் மாதிரி நிறைய உள்ளன.

இப்படி அவரவர் பிரச்சினைக்கேற்ப கிடைக்கும் பிரத்யேக சோப்பை முகத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால், ஏதோ ஒரு சோப்பை முகத்துக்குப் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதில் ஃபேஸ் வாஷே சிறந்தது” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“இத்தோட நிறுத்திக்கங்க”: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை எச்சரித்த சமுத்திரக்கனி

உப்பு தின்றவன் தண்ணி குடிக்கணும்: மன்சூர் அலிகான்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *