பீரியட்ஸ் வருவதற்கு முந்தைய வாரம் பெரும்பாலான பெண்களுக்கும் சிக்கலானதாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அந்த நாள்களில் அவர்கள் வழக்கத்தை விட வித்தியாசமாக நடந்து கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு.
யாரிடமும் பேசாமல் ஒதுங்கி இருப்பது, எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவது, சின்ன விஷயத்துக்குக்கூட அழுவது என மனத்தளவில் மாறுதல்களை உணர்வார்கள்.
இந்த நிலையில் உணவுப்பழக்கத்தில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே, மனத்தளவில் மாற்றத்தை உணர்வார்கள். எனவே, மாதவிலக்குக்கு முன்பான நாள்களில் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் ஹெல்த் டயட்டீஷியன்ஸ்.
ஆல்கஹால், அளவுக்கதிகமான டீ, காபி, கஃபைன் அதிகமுள்ள எனர்ஜி பானங்கள் போன்றவை மோசமான மனநிலையைத் தூண்டக்கூடியவை என்பதால் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு வயிற்று உப்புசம் இருக்கும். இந்த அறிகுறி இருந்தால் பச்சைக் காய்கறிகள், சாலட், புரொக்கோலி, காலிஃபிளவர், முட்டைகோஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை வாய்வுவை அதிகரிப்பதால், உப்புசமும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக சமைத்த உணவுகளைச் சாப்பிடலாம்.
பாலிஷ் செய்யப்படாத அரிசி சாதம், முழு கோதுமையில் செய்த சப்பாத்தி, முழு கோதுமையில் தயாரான பிரெட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவற்றுடன் நிறைய காய்கறிகள் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு… முட்டை சாண்ட்விச், நிறைய காய்கறிகள் வைத்த சப்பாத்தி ரோல், ஸ்டஃப்டு சப்பாத்தி, தொட்டுக்கொள்ள தயிர், 70 சதவிகிதம் காய்கறிகள் சேர்த்துச் செய்த பிசிபேளாபாத், தொட்டுக்கொள்ள தயிர்ப் பச்சடி போன்றவற்றில் ஒன்றை சாப்பிடலாம்.
இந்த உணவுகளில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டானது, செரட்டோனின் என்ற ஹார் மோன் உற்பத்தியைத் தூண்டும். அது மாதவிடாய் நாட்களில் அமைதியாக இருக்கச் செய்யும்’’ என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல… ஏன்?
சென்னை : 5 ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து!
நிலா விலகுது… நேரம் கூடுது: அப்டேட் குமாரு
‛மழை பிடிக்காத மனிதன்’… விஜய் மில்டன் ஷாக் தகவல் : அது எப்படி நடக்கும்?