பம்பரம் போல் சுற்றிவரும் பெண்களை மாதவிடாய் காலங்கள் சோர்வடைய செய்துவிடும். அந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
நபருக்கு பொறுத்து மாறுபடும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி, உபாதைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள சில பெண்கள் மருந்து எடுத்துகொள்வார்கள். இது முற்றிலும் ஒரு தவறான செயல். அந்த வலியிலிருந்து விடுபட இயற்கையான முறைகளை கையாள வேண்டும்
மாதவிடாய் காலங்களில் நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டைத் தடுக்கும். மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளுங்கள்
மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம் மற்றும் உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.
மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் அடிவயிற்றில் வலி ஏற்படும். இந்த வலியை போக்க நார்ச்சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை சாப்பிட வேண்டும். இந்த வகையான காய்கறிகள் வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் ரத்தத்தை சுத்தம் செய்யும்
செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாட்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால் உடலில் வலிமை ஏற்படும். அதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ எலும்புகளுக்கு வலிமைச் சேர்க்கும்.
மாதவிடாய் சமயத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகினால் உடல் சூட்டைத் தவிர்க்கலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் உள்ளிட்டவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்க உதவியாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுபஶ்ரீ
சிறை அனுபவங்கள் புக் ரிலீஸ்: அப்டேட் குமாரு
ஜிகர்தண்டா 3 பார்த்த பார்த்திபன்?