ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உப்பு குறைவான உணவுப் பழக்கம் மிக முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதாவது ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
“இதை நேரடியாக உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு மட்டும்தான் கணக்கு என நினைத்துக் கொள்ள வேண்டாம். பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃப்ரோஸன் உணவுகள் போன்றவற்றில் அளவுக்கதிகமாக சோடியம் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, அந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மேலும், “மதுப்பழக்கம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், அது அறவே தவிர்க்கப்பட வேண்டும். அளவுக்கதிகமான காபி, டீ, எனர்ஜி பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள், கஃபைன் சேர்த்த பானங்கள் எல்லாமே ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடியவை என்பதால் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
இவை தவிர, உடல் எடையைக் குறைக்க உதவும் எதுவும் ரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். அதே சமயம், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் எதுவும் ரத்த அழுத்த அளவை மோசமாக பாதிக்கும்.
உதாரணத்துக்கு, எடையைக் குறைக்க உதவும் பச்சைக் காய்கறிகள், கீரைகள், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள், பாலிஷ் செய்யப்படாத கார்போஹைட்ரேட், புரதச்சத்து போன்றவை எல்லாம் ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க உதவும்.
ஆனால், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள், எண்ணெய் பண்டங்கள் போன்றவை எடையை அதிகரிப் பவை. அவை எல்லாம் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் மசாலா பராத்தா
வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு : 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!
உயர்கல்வியில் ஜொலிக்கும் தமிழ்நாடு : ஸ்டாலின் பெருமிதம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : அஸ்வத்தாமனுக்கு போலீஸ் காவல்!