“தலைக்குக் குளிப்பதற்கு முன் கூந்தலில் எண்ணெய் வைத்து சிறிது நேரம் ஊற வைத்துக் குளிப்பது முடிக்கு ஊட்டம் அளிக்கும். அதுதான் சரியான முறையும்கூட.
எண்ணெய் வைத்துத் தலைக்குக் குளிப்பதற்கும் எண்ணெய் வைக்காமல் தலைக்குக் குளிப்பதற்குமான வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். தலைக்குக் குளிக்க தரமான ஷாம்பூ பிறகு கண்டிஷனர் உபயோகிக்கலாம்.
தினமும் தலைக்குக் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. வாரத்துக்கு இரண்டு நாள்கள் தலைக்குக் குளித்தால் போதுமானது. வெயில் அதிகமுள்ள நாட்களில், உங்களுக்கு அதிகம் வியர்க்கிறது அல்லது நீங்கள் ரெகுலராக வொர்க் அவுட் செய்பவர், அதனால் அதிகம் வியர்க்கிறது என்றால் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்கலாம். அப்போதும் ஒவ்வொரு முறையும் ஷாம்பூ உபயோகிக்கத் தேவையில்லை. கூந்தலை வெறுமனே அலசினாலே போதுமானது” என்கிறார்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெற்றிலை கஷாயம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
நான்கு பெரிய தோல்விகள்: தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா?