ஒரிஜினல் புகைப்படம்: வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்!

டிரெண்டிங்

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுடைய ஒரிஜனல் புகைப்படங்களை அதனுடைய அசல் தரம் குறையாமல் அனுப்பும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

உலகம் முழுவதும் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் தனது அப்டேட்டுகளை அடிக்கடி புதுப்பித்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் குழுவில் 256 பேர் இணைய முடியும் என்ற எண்ணிக்கையை 512-ஆக உயர்த்தியது. வாட்ஸ்அப் செயலியில் அதிகமாக பயன்படுத்தப்படும் எமோஜி அப்டேட் செய்யப்பட்டது.

whatsapp new feature

இந்தநிலையில், மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும் போது தரம் குறைவாக இருக்கிறது என்ற பிரச்சனை அடிக்கடி பயனர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இதனை சரி செய்யும் நோக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “வாட்ஸ்அப்பில் புகைப்படத்தை ஒருவருக்கு அனுப்புவதற்கு முன்பாக அதன் தரத்தை தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் உங்களுக்கு புதிய அனுமதி வழங்கும்.

whatsapp new feature

இதில் பயனர்கள் தங்கள் அசல் புகைப்படம் அல்லது உயர் தெளிவுத்திறன் உள்ள புகைப்படங்களை அனுப்பலாம். 3 புகைப்பட தர விருப்பங்களை அனுமதிக்க வாட்ஸப் சோதனை செய்து வருகிறது.

இதில் சிறந்த தரம், நார்மல், டேட்டா சேவர் ஆகிய மூன்று தரங்கள் உள்ளது. வாட்ஸ்அப்பின் செட்டிங்ஸ்சில் இந்த புகைப்பட தர விருப்பங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த அப்டேட் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த புதிய அப்டேட் குறித்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

செல்வம்

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!

ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
1
+1
0

1 thought on “ஒரிஜினல் புகைப்படம்: வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *