Whatsapp web to get chat lock new update

வாட்ஸ்அப் வெப் யூசர்களுக்கு புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் ஆனது உலகம் முழுவதும் விரும்பி பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் செயலி என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த நவம்பர் மாதம் ஆன்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனாளர்களுக்கான அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது. அது என்னவென்றால் பயனாளர்கள் தங்களது உரையாடல்களை ரகசிய குறியீட்டின் மூலம் லாக் செய்துக்கொள்ள முடியும்.

பயனாளா்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் செயலியானது, பல்வேறு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அதில் இந்த அப்டேட் முக்கியமான ஒன்றாகவே பாா்க்கப்பட்டது.

வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட உரையாடல் ரகசியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த உரையாடலை மட்டும் ரகசிய குறியீட்டை பயன்படுத்தி லாக் செய்துவிட்டால் அதை வேறு யாராலும் திறக்க முடியாது. ஸ்க்ரீன் லாக் ஆகாமல் இருக்கும் வரை மட்டுமே அந்த உரையாடலை பாா்க்க முடியும். ஸ்க்ரீன் லாக் ஆகிவிட்டால் மீண்டும் ரகசிய குறியீட்டை பயன்படுத்திதான் திறக்க வேண்டும்.

தற்போது இந்த அப்டேட் வாட்ஸ்அப் வெப் யூசர்களுக்கும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அலுவலகத்திலோ அல்லது பொது இடங்களிலோ பெரிய திரையில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது தங்களுடைய உரையாடல் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புபவா்களுக்கு இந்த அப்டேட் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, இந்த அப்டேட் ஆனது இன்னும் முழுமையடையவில்லை. ஆகையால் வாட்ஸ்அப் பீட்டா பயனாளர்களால் கூட தற்போதைக்கு பயன்படுத்த முடியாது.

இந்த அப்டேட்டில் பயனாளா்கள் கடவுச்சொல்லை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப எண்ணாகவோ, வாா்த்தையாகவோ, குறியீடாகவோ அல்லது எமொஜியாக கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

-பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீலகிரி: மகளிருக்காக 99 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்!

மெரினாவில் கலைஞர் நினைவிடம் இன்று திறப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts