தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் என்பது அன்றாட இன்டர்நெட் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. வாட்ஸ்ஆப் இல்லாத ஒரு நாளை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. WhatsApp warning backup messages
உலக நாடுகளில் மற்ற மெசேஜிங் ஆப்களை பயன்படுத்துபவர்களைவிட வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவர்களே அதிகம்.
எக்ஸ் தளத்தை தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனமும் கட்டணம் அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. சமீப காலமாக வாட்ஸ்ஆப்பில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த வாட்ஸ்ஆப் நிறுவனம்.
பயனாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கவே இந்த மாற்றங்கள் என்பது போல் தெரிவித்திருந்தது.
முற்றிலும் இலவசமாக இருந்த வாட்ஸ்ஆப் தற்போது பேக்அப் செய்வதற்கான ஒரு கட்டண விபரத்தை வெளியிட்டுள்ளது.
இதுநாள்வரை ஆன்ராய்டு போன்களில் அன்லிமிடெட் பேக்அப் வசதி இருந்து வந்த நிலையில் இப்போது அதற்கான கட்டுப்பாடு மற்றும் கட்டணத்தை கொண்டு வந்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
ஒவ்வொரு கூகுள் கணக்கிற்கும் 15GB வரை இலவசமாக பேக்அப் எடுத்துக் கொள்ள முடியும் அதற்கு மேல் போனால் ஒன்று இருக்கும் பைல்களை டெலிட் செய்ய வேண்டும் அல்லது கட்டணம் செலுத்தி சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரை இந்த வரம்பிற்குள் வாட்ஸ்ஆப் செயலி இல்லாமல் இருந்தது வாட்ஸ்ஆப் பேக்அப் மட்டும் லிமிட் இல்லாமல் அன்லிமிடெட் ஆக எடுத்துக் கொள்ளலாம். இப்போது இந்த 15GB வரம்பிற்குள் வாட்ஸ்ஆப் செயலியும் வந்துள்ளது.
கிடைத்த தகவலின்படி முதலில் இந்த கட்டண முறை வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அனைத்து பயனாளர்களுக்கும் நடைமுறைக்கு வரும்.
நாம் வாட்ஸ்ஆப்பில் பேக்அப் ஆப்ஷனை தேர்வு செய்தாலே தனிப்பட்ட கூகுள் அக்கவுண்டிற்கு தான் செல்லும் அதில் ஸ்டோரேஜ் லிமிட்டை அடைந்திருந்தால், ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்திதான் பேக்அப்-ஐ ஸ்டோர் செய்ய முடியும்.
முதலில் இலவசம் என்று வரும் அனைத்து செயலிகளும் காலப்போக்கில் கட்டணத்தை நோக்கி நகர்வதை பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் வருவாய் ஈட்டும் நோக்கமாவே பார்க்கப்படுகிறது. WhatsApp warning backup messages
இந்த கட்டணம் ஆனது 100GB ஸ்டோரேஜிற்கு $1.99-ல் இருந்து தொடங்குகிறது அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.165.64 ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-பவித்ரா பலராமன்
விவசாயிகள் மீது குண்டாஸ்: தலைவர்கள் கண்டனம்!
சனாதன தர்மம்: அரசியல் சட்டத்துக்கு பொருந்தா நெறி!
ஷமி 7 விக்கெட் எடுக்குற மாதிரி கனவு கண்டேன்… வைரலாகும் ரசிகரின் பதிவு!
WorldCup 2023: 48 வருஷத்துல இதான் பர்ஸ்ட்… கோலி, ரோஹித், ஷமி உடைச்ச ரெக்கார்டுகளை பாருங்க!