வாட்ஸ்அப் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே திகழ்கிறது. வாட்ஸ்அப்-ஐ மெட்டா நிறுவனம் வாங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு அப்டேட்களை கொடுத்து பயனாளர்களை மகிழ்வித்து வருகிறது.
முதலில் புகைப்படம் மற்றும் தகவல் மட்டுமே பதிவிடும் வகையில் இருந்த வாட்ஸ்அப், இப்போது ஸ்டேட்டஸ் அப்டேட், ஸ்டிக்கர், எமோஜி என அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது வாட்ஸ்அப் சேனல்ஸ் என பிரபலங்களை பின்தொடருவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஆன்ராய்டு, ஐஒஎஸ், வெப் என்று அனைத்து விதமான வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
30 நாட்களுக்கு பிறகு ஆன்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கும் குறைவான ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என்ற தகவலை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
இந்த வகை ஆன்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அக்டோபர் 24ஆம் தேதிக்கு முன்னதாக ஓஎஸ் அப்டேட் செய்து கொள்ள கால அவகாசம் கொடுத்துள்ளது. இது முழுவதுமாக பயனாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற தகவலையும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போனின் ஓஎஸ் வகையை தெரிந்து கொள்ள செட்டிங்ஸ்சில் About phone என்ற ஆப்ஷனில் Software version-ல் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் செய்ய தவறினால் அல்லது செய்ய முடியாவிட்டால் அக்டோபர் 24 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ் அப் உபயோகப்படுத்தும் போதெல்லாம் நினைவூட்டிக்கொண்டே இருக்கும் தவறும் பட்சத்தில் சிறிது காலத்திற்கு பிறகு குறுச்செய்திகளை அனுப்பவோ, பெறவோ, அழைப்புகளை மேற்கொள்ளவோ முடியாது. முழுவதுமாக வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
அப்டேட் செய்து பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன்கள்:
சாம்சங் கேலக்சி எஸ்
ஏசர் ஐகோனியா டேப் A5003
டிரான்ஸ்ஃபார்மர்
HTC டிசையர் HD
LG ஆப்டிமஸ் 2X
சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க் 3
இந்த வகை ஸ்மார்ட் போன்கள் இருப்பின் அதை அப்டேட் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். பழைய போன்களில் புதிய ஆப்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெறுவது கடினம்தான்.
அப்டேட் செய்து பயன்படுத்த முடியாத ஸ்மார்ட் போன்கள்:
நெக்சஸ் 7 (ஆன்ராய்டு 4.2 மாற்றம் செய்யலாம்)
சாம்சங் கேலக்சி நோட் 2
HTC ஒன்
சோனி எக்ஸ்பீரியா இசட்
LG ஆப்டிமஸ் ஜி ப்ரோ
சாம்சங் கேலக்சி எஸ்2
சாம்சங் கேலக்சி நெக்சஸ்
HTC சென்ஷேசன்
மோடோரோலா Droid Razr
சோனி எக்ஸ்பீரியா எஸ்2
மோடோரோலா zoom
சாம்சங் கேலக்சி டேப் 10.1
ஆசஸ் ஈ பேட்
வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களை அப்டேட் மற்றும் மாற்றம் செய்து கொள்ளவே இந்த கால கெடுவை வழங்கி இருக்கிறது.
-பவித்ரா பலராமன்
மனம் புண்படும் வகையில் அண்ணாமலை பேசமாட்டார்: வி.பி.துரைசாமி
“பாஜக தலைமை சரியான நேரத்தில் பேசும்” :கூட்டணி குறித்து அண்ணாமலை