வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

டிரெண்டிங்

வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் இந்த மாதத்துக்குள் அறிமுகம் செய்கிறது.

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் சேவையினால் உடனடியாக ஒரு செய்தியை, படத்தை, வீடியோக்களை அனுப்பவும் பெறவும் முடியும்.

இதனைத்தொடர்ந்து, வாட்ஸ்அப் சேவையை அந்நிறுவனம் மெருகேற்றி வருகிறது. ஏற்கனவே அதன் பிரைவசி அமைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் அனுப்பிய செய்தி சென்று சேர்ந்ததா என்று அறிய இரண்டு டிக்குகள், படித்திருந்தால் புளூ டிக். அதனை காட்டிக்கொள்ள விரும்பவில்லை எனில் அதனை மறைக்க ஆப்ஷன் என வசதிகள் உள்ளன. தொந்தரவு அளிக்கும் நபர்களை முடக்கவும் முடியும்.

அந்த வகையில் நாம் ஆன்லைனில் இருக்கிறோமா என்பதைத் தெரியப்படுத்தவும், அதனைத் தெரியப்படுத்த விரும்பவில்லை எனில் மறைக்கவும் ஆப்ஷன்கள் உண்டு. இதனை ஆக்டிவேட் செய்யச் செயலியின் வலது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் கடைசியாகக் காட்டும் செட்டிங்கினுள் சென்றால் அக்கவுன்ட் என காட்டும். அதனுள் பிரைவசி என்ற ஆப்ஷன் முதலிலேயே இருக்கும். அதில் நமது ஆன்லைன் நிலையை (லாஸ்ட் சீன்) அனைவருக்கும் தெரியப்படுத்தலாம், தொடர்பு எண்களுக்கு மட்டும் காட்டலாம், யாருக்கும் காட்ட தேவையில்லை, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் காட்ட தேவையில்லை ஆகியவை இருக்கும். அதனை தேர்வு செய்து தற்போது பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தப் போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் ஆகஸ்ட் மாதமே அறிவித்திருந்தது.

இந்நிலையில் , இந்த மாதத்தின் இறுதிக்குள் அந்த ஆப்ஷன் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. லாஸ்ட் சீன் மற்றும் ஆன்லைன் என அது இருக்கும். இதனை பயன்படுத்தி நாம் சாட்டிங்கில் இருந்தாலுமே நமது ஆன்லைன் நிலையை மறைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நாம் ஆன்லைனில் இருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது.

-மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *