இனி யாரும் மெசேஜ் பண்ணலனு கவலைப்பட வேணாம்: வாட்ஸ் அப் கொடுக்கும் புதிய அப்டேட்!

டிரெண்டிங்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனம் பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

அண்மையில் 256பேர் மட்டுமே ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேரமுடியும் என்றிருந்த எண்ணிக்கை வரம்பு மாற்றப்பட்டு, தற்போது 512ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மெசேஜ்கள் தானாக அழிவது, ஒருமுறை மட்டுமே மெசேஜ்களை பார்க்க அனுமதிப்பது, ஒரேநேரத்தில் 32பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சம், அந்த அழைப்புக்கான லிங்க்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோகாலில் இணையும் வசதி போன்றவற்றையும் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், பயனர்கள் தங்களது வாட்ஸ் அப் கணக்கில் இருந்து தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் இது கிடைக்கப்பெறும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கு பயனாளர்கள் Google Play Store/Apple App Storeக்குச் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது

பயனர்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.

NEW CHAT பொத்தானை தட்டவும் – இது, ஐபோனில் மேல்வலது மூலையில் கிடைக்கும் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் கீழேகிடைக்கும்.

இங்கே, உங்கள் மொபைல் எண்ணுடன் தொடர்பு அட்டையில் ‘Message Yourself’ எனக் காணலாம்.

தொடர்பைக் கிளிக் செய்து பயனாளர்கள் தங்களுக்கு தாங்களே குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம்.

புதிய அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு செய்திகளுடன் புகைப்படங்கள், ஆடியோக்கள், வீடியோக்களை அனுப்ப முடியும். தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக ஆவணங்களைப் பகிர முடியும் எனவும், மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உச்சபட்ச வேகத்தில் தெற்கு ரயில்வே!

காவல் நிலையம் முன்பு குப்பையைக் கொட்டிய தூய்மைப் பணியாளர்: காரணம் என்ன?

+1
0
+1
2
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.