விலையுயர்ந்த போன்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைக்கால அப்டேட்டினால் சில பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ள உள்ளது.
அக்டோபர் 24 ஆம் தேதி முதல் ஆப்பிளின் இயங்குதளமான ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 உள்ள போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ்அப் மெட்டா நிறுவனம் சார்பில், ஐஓஎஸ் 10 அல்லது ஐஓஎஸ் 11 வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. அவர்களின் சாதனங்களில் வாட்ஸ்அப் சேவைகள் நிறுத்தப்படும்.

தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த பயனர்கள் தங்கள் ஐபோன்களைப் புதுப்பிக்க வேண்டும். ஐஓஎஸ் 12 அல்லது புதியவற்றை அப்டேட் செய்யுங்கள்.
அதேபோல் ஆண்ட்ராய்டு பயனர்கள் 4.1 அல்லது அதற்கு அடுத்த வெர்ஷன்களை கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கும் வாட்ஸ்அப் சேவை அளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது.
புதிய ஐஓஎஸ் அப்டேட் செய்வது எப்படி?
ஐஓஎஸ் 10 மற்றும் 11 வெர்ஷன்கள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டதால், அந்த இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே புதிய மென்பொருளுக்கான அப்டேட் செய்தி வந்திருக்கும்.
ஐபோனில் Settings > General என்ற பகுதிக்கு சென்றால் புதிய மென்பொருளை அப்டேட் செய்யச் சொல்லும்.
அதனை கிளிக் செய்தால் புதிய ஓஎஸ் பதிவிறக்கமாகி செயல்பட தொடங்கும். இந்த மென்பொருள் அப்டேட் மூலம் சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகளையும், அம்சங்களையும் பெறலாம். அப்டேட்டுக்கு முன் தனிப்பட்ட தகவல்களை பேக்அப் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்