வாட்ஸ்ஆப் நமது அன்றாட பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. கருத்து பரிமாற்றத்திற்கும், வீடியோக்கள், போட்டோக்கள் அனுப்புவதற்கும் மிகவும் எளிமையான இயங்குதளமாக வாட்ஸ்அப் உள்ளது.
இந்தியாவில் மட்டும் 53 கோடிக்கும் மேற்பட்டோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகளின் எண்ணிக்கையை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வந்தது.
அந்தவகையில், கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமாக வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதி, 2021 சட்டத்தின் கீழ், பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் வாட்ஸ்ஆப் சேவை விதிகளை மீறியதன் காரணமாக இந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 30 வரை 69,307,254 வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் பயனர்கள் புகாரளிப்பதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டது.
வாட்ஸ்ஆப் மோசடியில் ஈடுபடும் கணக்குகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமரை சந்திக்க போவது ஏன்? – உதயநிதி பதில்!
அதிமுக ஐடிவிங் கூட்டம் : எடப்பாடி நடத்திய மாஸ்டர்கிளாஸ்!