காலை உணவுக்கு கேன் ஜூஸ்களைத் தவிர்த்து, பழச்சாறுகளைத் தயாரித்துச் சாப்பிடலாம். காற்றடைத்து விற்கப்படும் சிப்ஸ்களைத் தவிர்த்துவிட்டு, கடலை உருண்டை, எள்ளு உருண்டைகளைச் சாப்பிடலாம்.
சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் காய்கறிகளைவிட, மார்க்கெட்டில் கிடைக்கும் காய்கறி, பழங்கள், கீரைகள் வாங்கிச் சாப்பிடுவது நல்லது.
`பளிச்’ வெள்ளைச் சர்க்கரை வேண்டாம். சத்தும் சுவையும் நிறைந்த கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இளநீரை அவ்வப்போது குடித்தாலே போதும், சருமம் முதல் குடல் வரை ஆரோக்கியம் காக்கும் சிறந்த பானம் அது.
மைதாவால் தயாரிக்கப்பட்ட கேக், பிஸ்கெட், குக்கீஸ்களைத் தவிர்த்துவிட்டு, சிறுதானிய லட்டு, கேழ்வரகு லட்டு, சிறுதானிய இனிப்புப் பலகாரங்களைச் சுவைக்கலாம்.
டி.வி-யில் விளம்பரப்படுத்தப்படும் உணவுகளுக்கு விடை கொடுத்துவிட்டு, நாம் வீட்டில் செய்யக்கூடிய முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களைச் சாப்பிடுவது நல்லது.
இரண்டு நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் உணவுகளுக்கு பதிலாக, சத்துக்களை அள்ளித்தரும் சிவப்பு அவல் சமைத்துச் சாப்பிடவும்.
ஐஸ் டீ, கோல்டு டீக்கு பதிலாக, சுக்கு காபி, கடுங்காபி, மூலிகை டீ, கிரீன் டீ ஆகியவற்றைக் குடிக்கலாம்.
பீட்சாவும் பர்கரும் சாப்பிட்டே ஆகணும் என்ற தூண்டுதல் இருந்தால், அதை நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் சமையல் அறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களாகவே இருக்கட்டும்.
சிறுதானியங்களைவிட சிறப்பான உணவாக நிச்சயம் ஓட்ஸ் இருக்காது. சர்க்கரைநோய், இதய நோய், கெட்டக் கொழுப்பு ஆகியவற்றை தடுக்கும் சக்தி சிறுதானியங்களுக்கு உண்டு.
சாக்லேட்டுக்கு பதிலாக, இஞ்சி மொரபா, பேரீச்சை, கருப்பட்டியைச் சுவைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா… சண்டே ஸ்பெஷல்: பாக்கெட் பொருட்கள் வாங்குபவரா நீங்கள்.. ஒரு நிமிஷம்!
டிஜிட்டல் திண்ணை: மூட்டை கட்டும் ஆர்.என்.ரவி… புதிய ஆளுநர் வி.கே.சிங்? ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
தமிழ்த்தாய் வாழ்த்து… ஆளுநருக்கு எதிராக திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!
சு.வெங்கடேசன் பேச்சும்… மூர்த்தி பதிலும்: என்ன நடக்கிறது மதுரை திமுக கூட்டணியில்?