இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. அதைத் திறம்பட நிர்வகிப்பது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்தும்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைத்து மனதுக்கு மறுமலர்ச்சியை பெற்ற நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ…
மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம். இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும்.
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில் சுவாசத்தில் கவனம் செலுத்தி ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிட சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்க அன்பானவர்களின் ஆதரவு முக்கியமானது. வலுவான சமூக தொடர்பு கொண்டவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும்.
நேரில் சந்திப்பது, செல்போனில் பேசுவது, வீடியோவில் அரட்டை அடிப்பது என ஏதாவதொரு வகையில் உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களுடன் சில நிமிடங்களை செலவிடுவதும், உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைப்பதும் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும்.
செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது, அதனுடன் நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். தனிமை உணர்வையும் குறைக்கும். மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.
டிஜிட்டல் திரைகள் மற்றும் சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பார்வையிடுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வித்திடும்.
அதை ஒதுக்கிவைத்து விட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். அது மனதை இதமாக்கும். மறுமலர்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும்.
தோட்டக்கலையில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
செடிகளை நடுவது, வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது, தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மையை பெற்றுத்தரும். தினசரி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் இணைய வைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : கலைஞர் பிறந்தநாள் முதல் வெப்ப அலை எச்சரிக்கை வரை!
கிச்சன் கீர்த்தனா : மாவற்றல் சாம்பார்
Exit Poll 2024: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
அருணாச்சல் பாஜக… சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா… மீண்டும் ஆட்சியமைக்கும் ஆளும் கட்சிகள்!
கோவை எக்சிட் போல்: அண்ணாமலை என்ன ஆவார்?