வேலை காரணமாகவும் அழகுக்காகவும் சிலர் ஸ்லீவ்லெஸ் உடைகள் அணிய வேண்டியிருக்கிறது. ஆனால், அக்குள் பகுதி கறுப்பாக இருப்பதால் தர்மசங்கடமாக உணர்வார்கள்.
அக்குள் பகுதியின் கருமையை நீக்க க்ரீம், ஆயின்மென்ட் உள்ளிட்டவை உதவுமா? சருமநல மருத்துவர்கள் பதில் என்ன?
“தென்னிந்திய மக்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்களுக்கு அக்குள் பகுதி கறுப்பாகத்தான் இருக்கும். அக்குள் என்றில்லை, மார்பகங்கள், தொடை இடுக்கு, வெஜைனா பகுதி போன்றவற்றிலும் கருமை சற்று அதிகமாகத்தான் இருக்கும்.
இன்னும் சிலருக்கு மரபியல் ரீதியாகவும் அந்தக் கருமை தொடரும். சிலர் அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் உள்ள முடிகளை நீக்க அவசரம் அவசரமாக ஷேவ் செய்வார்கள். சிலர், ரிவர்ஸில் ஷேவ் செய்வார்கள்.
இவையெல்லாம் அந்தப் பகுதிகளின் கருமைக்குக் காரணமாகும். சருமத்தில் உராய்வு அதிகமானாலும் கருமை ஏற்படும். இதை `பிக்மென்ட்டேஷன்’ என்கிறோம்.
இறுக்கமான உடைகள் அணிவதாலும் இதுபோல பிக்மென்ட்டேஷன் வரலாம். செயின் அணிகிறவர்கள் சிலருக்கும் இந்தக் கரும்படலம் ஏற்படலாம்.
இன்சுலின் சரியாகச் சுரக்காதவர்களுக்கும், உடல் பருமன் உள்ளவர்களுக்கும் சருமம் இயற்கையாகவே சற்று தடிமனாக மாறும்.
அந்தக் கருமையானது வெல்வெட் போன்ற படலமாகக் காட்சியளிக்கும். அதை என்னதான் தேய்த்துக் குளித்தாலும் போகாது.
உடல் பருமன் உள்ளவர்கள், எடையைக் குறைத்தால் மட்டுமே அது ஓரளவு மறையும். இப்படி எந்தக் காரணத்தால் அக்குள் பகுதியில் கருமை ஏற்பட்டது என்பது தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை கொடுக்க வேண்டும். அதைத் தவிர்த்து கண்ட கண்ட க்ரீம் தடவுவதெல்லாம் பலன் தராது.
அக்குள் ரோமங்களை லேசர் முறையில் அகற்றுவது மிகப் பாதுகாப்பானது. இதில் கருமையும் மறையும். அடுத்து ரேஸர் உபயோகிக்கலாம். அதை ரிவர்ஸில் வைத்து ஷேவ் செய்யாமல், சிங்கிள் சைடாக உபயோகிக்க வேண்டும். ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிக்க வேண்டாம்.
அக்குள் பகுதியில் வியர்வை தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காற்றோட்டமான உடைகளை அணிவது, அக்குள் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவையும் அவசியம். ஆன்டிபாக்டீரியல் வாஷ் பயன்படுத்தலாம், பவுடர் உபயோகிக்கலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் இந்தியா – ஆப்கான் போட்டி வரை!
கிச்சன் கீர்த்தனா : முளைகட்டிய கொள்ளு காய்கறி சாலட்
இப்பவே கண்ணைக்கட்டுதே: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றமா? கயல்விழி இல்ல திருமண விழா கிளப்பிய புயல்!
“ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்” : ஸ்டாலின் வாழ்த்துக்கு ராகுலின் சுவாரஸ்ய பதிவு!