உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதை தணிக்க அதிகப்படியான வியர்வை முகத்தில் சுரக்கும். இந்த நிலையை ‘ஹைப்பர்ஹைட்ரோசிஸ்’ என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். வெப்பமான வானிலை நிலவும்போதும், கடுமையான உடற்பயிற்சி செய்யும்போதெல்லாம் இந்தப் பிரச்னை தீவிரமாகும்.
“முகத்தில் அதிகம் வியர்ப்பவர்களுக்கு தலையிலும் வியர்க்கும். காரணம், இந்த ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி முகம் மற்றும் தலையைத்தான் அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு மரபணு மூலமாகவும் முகத்தில் அதிகம் வியர்க்கும். சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் வியர்க்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் முகத்தில் வியர்வை வழிந்தோடும். முகத்தில் எண்ணெய் வடிதல் இருந்தாலும் முகத்தில் அதிகமாக வியர்க்கும்
இதைத் தவிர்க்க முகத்தை அடிக்கடி குளிர்ச்சியான நீரில் கழுவலாம். அதிகப்படியாக வியர்க்கும்போது குளிக்கலாம். இதனால் வியர்வை வழிந்தோடுவதைக் குறைக்க முடியும். மேலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை அடிக்கடி பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்து வியர்வை வராமல் தடுக்கும்.
போதுமான காற்றோட்டத்துடன் கூடிய அறையில் வசிப்பதும் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட தளர்வான ஆடைகளை அணிவதும் நல்ல பலனைத் தரும். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், இசையைக் கேட்பது அல்லது நெருங்கியவர்களும் அரட்டை அடிப்பதன் மூலமும் வியர்வை வழிந்தோடுவதில் இருந்து விடுபடலாம். முக்கியமாக, மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியான நிலையில் இருந்தாலே போதும்… வழிந்தோடும் வியர்வை குறையும்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிடிஎஃப் வாசனுக்கு வாகனத்துல கண்டம்: அப்டேட் குமாரு
ஆழ்ந்த தியானம்… விவேகானந்தருக்கு மரியாதை செலுத்திய மோடி
“மகாராஜா” : அசர வைக்கும் விஜய் சேதுபதி… டிரைலர் எப்படி?
அதிமுக அணையப்போகிற விளக்கு: அண்ணாமலை காட்டம்!