What is the solution for a sudden toothache?

ஹெல்த் டிப்ஸ்: திடீர் பல் வலி… தீர்வுதான் என்ன?

டிரெண்டிங்

நேற்று வரை நன்றாக இருந்திருப்போம். இன்று திடீரென ஒரு வாய் காபி குடிக்கும்போதே அது பல்லில் பட்டதும் சுளீரென்ற வலியை உணர்வோம். சில சமயங்களில் ஒன்றிரண்டு நாட்களில் வலி தானாக மறைந்து போகும்… சிலருக்கு தொடர்கதையாகவும் மாறும்.

திடீரென தோன்றி மறையும் பல் வலிக்கான காரணங்கள் என்ன, வராமல் தடுக்க முடியுமா… பல் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“அதிகபட்ச சூடு அல்லது அதிகபட்ச குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளும்போது, பல் வலியை உணரலாம். எல்லோருக்கும் இந்த வலி வருவதில்லை. பற்களில் உள்ள டென்ட்டின் மற்றும் பல்ப் ஆகிய லேயர்கள் இரண்டும் அதீத சூடு அல்லது குளிர்ச்சியை எதிர்கொள்ளும் நிலையில் திடீரென கடுமையான பல் வலி ஏற்படலாம்.

பல் சொத்தை, பற்கள் இழப்பு, வாய் சுகாதாரம் சரியாகப் பேணப்படாதது, நீண்ட காலமாக பற்களில், ஈறுகளில் படிகிற காரை போன்றவற்றால் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதன் விளைவாக ஈறுகளில் சீழ்கோப்பது, இன்ஃபெக்‌ஷன் போன்றவை ஏற்பட்டு திடீரென பல் வலி வரும்.

இதைத் தவிர்க்க… தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டியது அடிப்படை. பற்களைச் சுத்தம் செய்ய ஃப்ளாஸிங் (Flossing) முறையைப் பின்பற்றலாம். அதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில், ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் சுத்தமான தண்ணீரால் வாய்க் கொப்பளிக்க வேண்டும்.

அமிலத்தன்மை நிறைந்த சோடா, குளிர்பானங்கள், உணவுகளைத் தவிர்க்கவும். குறிப்பாக, பற்களில் படும்படி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக இனிப்புள்ள பானங்கள், உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அப்படியே சாப்பிட்டாலும் வாயைக் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

கடினமாக, அழுத்தமாக பல் துலக்கக்கூடாது. மென்மையாக பிரஷ் பண்ண வேண்டும். கடினமாக பிரஷ் செய்வதால் எனாமல் தேயுமே தவிர, பற்களின் கறை போகாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பல் செட் பொருத்திக் கொண்டவர்களுக்குத்தான் கடினமான பிரஷ் பரிந்துரைக்கப்படும். இயற்கையான பற்கள் இருப்பவர்கள் சாஃப்ட் பிரஷ் தான் பயன்படுத்த வேண்டும்.

சைனஸ் மற்றும் காது, மூக்கு, தொண்டை தொடர்பான இன்ஃபெக்‌ஷன் இருந்தால் சிகிச்சை எடுக்க வேண்டும். தாடையில் பிரச்சினை இருந்தாலோ, தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கம் இருந்தாலோ மருத்துவ ஆலோசனையோடு சரி செய்ய வேண்டும்.

சிகரெட், ஆல்கஹால் போன்ற பழக்கங்கள் பல் ஆரோக்கியத்தை பாதிக்கும். ரத்த ஓட்டத்தைக் குறைக்கும். பல் வலிக்கும் காரணமாகும் என்பதால் இவற்றைத் தவிர்க்கவும்.

ஆறு மாதங்களுக்கொரு முறை பல் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்வது அவசியம்.

திடீரென உணரப்பட்ட பல்வலி, 48 மணி நேரத்தைத் தாண்டியும் தொடர்ந்தால் பல் மருத்துவரை அணுக வேண்டும். பற்களின் நிறம் மாறினாலோ, ஈறுகள் வீங்கினாலோ, ரத்தம் கசிந்தாலோ, புண்கள் வந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அளவுக்கதிகமான பல் கூச்சத்தை உணர்ந்தாலும் உடனே பல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கரும்புச்சாறு நட்ஸ் பர்ஃபி

பக்ரீத் பிரியாணி பரிதாபம்: அப்டேட் குமாரு

முரண்டு பிடிக்கும் அட்லி… மல்லுக்கட்டும் தயாரிப்பாளர்கள்… அல்லு அர்ஜூன் படம் டிராப்?

சுப்மன் கில் மீது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியா? உண்மை என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *