குளிர்காலத்தில் மட்டுமில்லை… சிலருக்கு கோடைக்காலத்திலும் ஜலதோஷம் இருந்து கொண்டே இருக்கும். இந்த தொடர் ஜலதோஷ பிரச்சினைக்கான தீர்வு என்ன? பொதுநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“பெரும்பாலும் பனிக்காலம், அலர்ஜி அல்லது கிருமித்தொற்றால் சளி பிரச்சினை ஏற்படும். அலர்ஜியால் சளி ஏற்படுகிறது என்றால் அலர்ஜி ஏற்படுத்தும் விஷயத்தை ஒதுக்க வேண்டும் அல்லது அதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். கிருமித் தொற்றால் ஜலதோஷம் ஏற்படும்போது மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுப்பது மிக மிக முக்கியம்.
பொதுவாகவே, சளி பிரச்சினை உள்ளவர்கள், குளிர்ந்த உணவுகளைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மூச்சுப்பயிற்சி செய்யலாம்.
வைட்டமின் சி சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது ஜலதோஷத்தின் அறிகுறிகள் நீங்கும். நிறைய தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த நீர் அருந்தலாம். சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
எப்போதுமே ஜலதோஷம் இருப்பவர்கள் அதை ‘எப்பவும் இருக்கிறதுதானே…’ என அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக, பாமக, அமமுக… : என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்!
CSK vs RCB: முதல் போட்டியில் ‘களமிறங்கும்’ அந்த 11 வீரர்கள் யார்?
Karthi: படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!