ஒரு நபரால் எவ்வளவு தூரம் காலில் வலியில்லாமல் நடக்க முடியுமோ அதுவே நார்மலான வாக்கிங்.
ஒருவர் வேலை ஒன்றைச் செய்துவிட்டு இரவு படுக்கப் போகும்போது அவரது மூட்டுகளில் எந்தவொரு வலியும் ஏற்படவில்லையெனில் அவர் அன்றைக்கு சரியான அளவில் வேலை செய்திருக்கிறார் என்று பொருள்.
ஆனால், ஒருவர் வேலை செய்தபிறகு அவருக்கு கை மற்றும் கால்களில் மிகுந்த வலி உண்டானால் செய்த வேலையின் அளவு அதிகம் என்று பொருள்.
சைக்கிளில் காற்று குறைந்தால் காற்றடிப்பதுபோல, காரில் பெட்ரோல் தீர்ந்தால் மீண்டும் அதனை நிரப்புவதுபோல நமது எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துகள் குறையும் போது ஆரோக்கிய உணவாலும், தேவையான ஓய்வாலும் அதைச் சமன் செய்துகொண்டே வர வேண்டும்.
ஆனால், இவ்வாறு செய்யாமல் தொடர்ந்து வேலையை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் மூட்டுத் தேய்மானம், எலும்பு வளைவது, வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யமுடியாமல் போவது, தரையில் உட்கார்ந்தாலோ படுத்தாலோ எழ முடியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் வர ஆரம்பிக்கும்.
எலும்புகளில் வலிமை இல்லை யென்றால் அது சேதமாவதோடு அதன் மேலே இருக்கும் சவ்வும் சேதம் ஆகும். இதன் காரணமாக மூட்டு இணைப்புகளிலும் வலி வரும்.
அவரவரின் உடல் பருமன் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல நடைப் பயிற்சி போன்றவற்றை மேற் கொள்ளவேண்டும்.
கால்சியம் மட்டும் எலும்பு ஆரோக்கியத்துக்குப் போதுமானது அல்ல. புரதம் போன்றவையும் சேர்ந்தால்தான் ஆரோக்கியமான எலும்பைக் கட்டமைக்க முடியும். எனவே, உணவில் புரதம், சுண்ணாம்புச்சத்து ஆகியவை அவசியம் இருக்க வேண்டும்.
கூடவே வைட்டமின் – சி நிறைந்த நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றையும் தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி சமச்சீரான உணவை தினசரி எடுக்கும்போது அன்றன்றைக்கு எலும்புகளில் சேதமாகும் பகுதியைச் சரி செய்ய முடியும்.
எடை அதிகம் உள்ளவர்கள் தரையில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியவில்லையெனில் மூட்டுப் பிரச்சினை சரியாகும் வரைக்கும் அதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதையும் மீறி கீழே உட்கார்ந்து எழுவதைச் செய்துவந்தால் உடல் எடை முழுவதும் கால் மூட்டுகளில் இறங்கி, மூட்டுகள் இன்னும் சேதமாகும். வலியும் அதிகமாகும்.
எனவே, கனம் மூட்டுகளில் இறங்காத அளவிலான உடற்பயிற்சிகளை, அதாவது மூட்டுகளைச் சுற்றியுள்ள முன்பகுதித் தசை, பின்பகுதித் தசை போன்றவற்றை வலிமையாக்கும் பயிற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனையின்படி செய்து மூட்டுகளை வலிமையாக்கலாம்.
இப்படி, மூட்டுகளுக்கு அதிக பாரம் கொடுக்காமல் பயிற்சிகளைச் செய்துவிட்டு பின்னர் பிரச்னை சரியானதும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கமான செயல்களில் ஈடுபடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லிப்ஸ்டிக்கும் ஒரு பிரச்சன தான் போல : அப்டேட் குமாரு
சவுக்கு சங்கர் மீதான 2ஆவது குண்டர் சட்டம் ரத்து!
தப்பான பிசினஸ்… தவறான தொடர்பு… தமிழரின் உயிரை எடுத்த கேரள கும்பல்!