ஹெல்த் டிப்ஸ்: திடீர் உடற்பயிற்சி… உணவு விஷயத்தில் கவனம் தேவை!

Published On:

| By Selvam

முதன்முறையாக உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து பலன் அடைய நினைப்பவர்கள் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள்.  

உடற்பயிற்சிக்கு முன்பாக போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல், உடல் வறண்டு, சூடானால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

அடிக்கடி வெளி உணவுகளைச் சாப்பிடுபவராக இருந்தாலும் வயிற்றுக் கோளாறுகள் வரலாம்.

வொர்க் அவுட் செய்த பிறகு அடுத்த வேளை உணவை செரிமானம் செய்யும் அளவுக்கு இடைவெளி விட வேண்டும். வொர்க் அவுட் முடித்ததும் நீங்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

அதன் பிறகு 45 நிமிடங்கள் கழித்து உங்கள் உணவை எடுத்துக்கொள்ளலாம். இது போஸ்ட் வொர்க் அவுட் எனப்படும் உடற்பயிற்சிக்குப் பிறகான அட்வைஸ்.

ப்ரீ வொர்க் அவுட் என்பதில் வொர்க் அவுட்டுக்கு  40 நிமிடங்களுக்கு முன்பு மிதமாக ஏதேனும் சாப்பிடலாம்.

அப்போதுதான் அது எளிதில் செரிமானமாகும். வொர்க் அவுட் செய்வதற்கு முன் வயிறு நிறைய எதையும் சாப்பிடக்கூடாது.

சாதாரணமாக நீங்கள் காலை 9 மணிக்கு பிரேக் ஃபாஸ்ட் எடுப்பவர் என்றால், 12.30 மணிக்கு மதிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதற்கிடையில் 11 மணி வாக்கில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

மீண்டும் 4 மணி வாக்கில் ஏதேனும் சாப்பிட்டால், 7 மணிக்கு இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

உங்களுக்கு  எவ்வளவு பசிக்கிறதோ, அந்த அளவு மட்டும் சாப்பிட்டால் போதும். வொர்க் அவுட்டுக்கு 40 நிமிடங்களுக்கு முன்பும், வொர்க் அவுட் செய்த உடனேயும் புரோட்டீன் உணவுகள் சாப்பிடலாம். அந்த இடைவெளி சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இவற்றையெல்லாம் சரியாகப் பின்பற்றினால் உடற்பயிற்சியின் முழு பலனையும் அடைவீர்கள்” என்கிறார்கள்.  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

11.48 லட்சம் மகளிருக்கு நிதி சார்ந்த பயிற்சி அளிக்கும் தமிழக அரசு!

ஹெல்த் டிப்ஸ்: முழங்காலில் வலி… தவிர்க்க சில வழிகள்!

கடலூர் பற்றி அத்துப்படி… நிவாரணக் களத்தில் கலக்கிய ககன் தீப் சிங் பேடி

பியூட்டி டிப்ஸ்: பளிங்கு முகத்தில் பருக்கள்… தடுக்க உதவும் பாரம்பரியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share