humane ai pin features price

டிஸ்பிளே இல்லாத உலகின் முதல் AI Pin ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன?

டிரெண்டிங்

ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் இருவர் இணைந்து உருவாக்கிய உலகின் முதல் டிஸ்பிளே இல்லாத AI Pin ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் வருகைக்கு பின் உலகின் பெரும் புரட்சிகள் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. humane AI pin features price

குறிப்பாக சாட்ஜிபிடி தொழில்நுட்பம் அதில் அதிவேக தொழில்நுட்ப பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் உலகின் முதல் டிஸ்பிளே இல்லாத ஸ்மார்ட்போனை ஹியூமேன் என்னும் நிறுவனம் கடந்த நவம்பர் 16-ம் தேதி அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன், அங்கு 699 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய மதிப்பில் இது 58,000 ரூபாய் ஆகும். இன்னும் உலகின் பிற நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வரவில்லை.

என்றாலும் அடுத்த 2024-ம் ஆண்டு இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

humane ai pin features price

இந்த டிஸ்பிளே இல்லாத ஹியூமேன் AI Pin ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று நாம் கீழே பார்க்கலாம்:-

  • இதை நம்முடைய ஆடையின் மேல் காந்தத்தின் உதவியுடன் அணிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் பின் மற்றும் பேட்டரி பூஸ்டர் என்ற இரு பாகங்களோடு இந்த AI Pin ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மொபைல் சாதனத்துடன் நாம் குரல் கட்டளைகள் அல்லது கை சைகைகள் வழியாக தொடர்பு கொள்ள முடியும்.
  • உங்களுக்கு எதிரில் இருப்பவர் வேறு மொழி பேசினால் அதை புரிந்து கொண்டு அவர்கள் பேசுவதை மொழி பெயர்த்து தரக்கூடிய வசதி இதில் இருக்கிறது.
  • நாம் கூறுவதை புரிந்து கொண்டு குறுஞ்செய்தி அனுப்புவது, கால் செய்வது, புகைப்படம் எடுப்பது போன்ற வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
  • இதில் கொடுக்கப்பட்டுள்ள ப்ரோஜெக்டரை பயன்படுத்தி உங்கள் உள்ளங்கையில் தரவுகளை காணும் வகையில் AI Pin ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 13 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இதன் மூலம் நாம் செல்லும் இடங்களில் படங்களை கிளிக் செய்ய முடியும். மேலும் உணவு பொருட்களை ஸ்கேன் செய்து அதில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் புகைப்படம் எடுக்கும் முன் நம்மால் பிரீவியு (Preview) பார்க்க முடியாது.
  • விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்: சாட்ஜிபிடி 4, ஓபன் AI தொழில்நுட்பங்களால் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதன் வழியாக உங்கள் மின்னஞ்சல்களை ஸ்கேன் செய்வது, தேவைக்கு ஏற்றவாறு அவற்றை சுருக்குவது, வெவ்வேறு மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது ஆகியவற்றை செய்ய முடியும்.
  • நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது சூழல் சார்ந்து உங்களுக்கு தேவையான தகவல்களை இந்த ஸ்மார்ட்போன் அளிக்கும். உதாரணமாக உங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்கள், உணவகங்கள் குறித்த தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
  • நீங்கள் இந்த ஸ்மார்ட் போனை உங்களுடைய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட், மொழி பெயர்ப்பாளர், தனிப்பட்ட பயிற்சியாளர் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

வி.பி.சிங் என்னிடம் சொன்ன அந்த வார்த்தை… டெல்லி ஃபிளாஷ்பேக்… நெகிழ்ந்த ஸ்டாலின்

உதயநிதிக்கு ப்ரமோஷன்- முந்திக் கொண்ட துரைமுருகன்

humane AI pin features price

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *