பியூட்டி டிப்ஸ்: வறண்ட சருமம்… உடனடி தீர்வு என்ன?

நன்றாக குளித்து முடித்து அலுவலகம் அல்லது வெளியிடங்களுக்குச் சென்ற பிறகு அன்றாட பணிகளுக்கு இடையே சிலருக்கு சருமத்தில் அரிப்பு ஏற்படும். அதை சரி செய்யும் விதமாக சொறிந்தால் அந்த இடம் வெண்மையாகக் காட்சி தரும். ஏன் இப்படி? இதைத் தவிர்ப்பது எப்படி? சருமநல மருத்துவர்கள் சொல்லும் தீர்வு என்ன?

“சருமத்தில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருந்தால் இந்த நிலை ஏற்படும். இதனால் வெள்ளைத் திட்டுக்கள், அரிப்பு, கரும்புள்ளிகள், வெடிப்புகள், தேமல் போன்றவையும் ஏற்படலாம். இதற்காக கவலைப்பட வேண்டியது இல்லை.

இதை சமாளிக்க குளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய்விட்டுக் குளிக்கலாம். இது சருமத்தில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். தினமும் குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி மிதமான வெந்நீரில் குளித்து வந்தாலும் வறண்ட சருமம் சரியாகிவிடும்.

குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதன் மூலம் சருமம் மினுமினுக்கும். குளிருக்கு இதமாகவும் இருக்கும்.

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது இந்த எண்ணெயை உடலில் தடவிக்கொண்டு குளியுங்கள்.

ஒரு பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டம்ளர் வினிகர் சேர்த்து 15 நிமிடங்கள் உடம்பை ஊறவைத்துக் குளிக்கவும். இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றைக் கலந்து முகம், கை, கால்களில் பூசினால், சருமம் பளிச்சென இருக்கும்.

நான்கு பாதாம் பருப்பு அரைத்த விழுதுடன், தேன், பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து சருமத்தில் பூசி ஐந்து நிமிடம் கழித்துக் கழுவலாம்.

சந்தன பவுடர், பச்சைப் பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, முல்தானி மட்டி பவுடர், ரோஜா இதழ் தூள் இவற்றைக் கலந்துவைத்து, சருமத்தில் தேய்த்துக் குளித்துவர, வறட்சி நீங்கி, தோல் பளபளக்கும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான்கீரை தோசை  

மாமன்னன மறந்துட்டாரு போல : அப்டேட் குமாரு

”நாங்களும் கோயம்புத்தூர்தான்”: முதல் கோவை- அபுதாபி விமானத்தில் எழுந்த தமிழ் குரல்!

பியூட்டி டிப்ஸ்: மந்தமான சூழலில் முகப்பொலிவுக்கு உதவும் தயிர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts