ஹெல்த் டிப்ஸ்: தினமும் வேப்பிலையை சாப்பிட்டுவந்தால் என்னாகும் தெரியுமா?
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே தானாகவே ஜலதோஷம், இருமல், சளி போன்றவை நம்மை தேடி வரும். அதற்கு ஆங்கில மருத்துவத்தை நாடாமல் வீட்டில் கிடைக்கும் அருமையான வேப்பிலையை வைத்து கசாயம் செய்து சாப்பிட்டால் நோய் சரியாகும்.
வேப்பிலை கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. சளியால் தலையில் நீர் கோர்த்து தலைவலியால் கண்டிப்பாக அவதிபடுபவர்கள்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.
அது மட்டுமில்லாமல் வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்க கூடிய தன்மை கொண்டது.
வேப்பிலை நம் உடலில் ஏற்படும் சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவும் பயன்படுகிறது.
தினமும், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியா போன்ற காய்ச்சல் குணமாக வாய்ப்புகள் உண்டு.
நீரிழிவு நோய்களால் அவதிப்படும் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாத்திரை எதுவுமின்றி உடல்நிலை குணமாகும்.
வேப்பிலை மரத்தின் குச்சிகள் பல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த குச்சிகளைக் கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதோடு பற்சொத்தை வராமல் தடுக்க உதவுகிறது.
எனவே வேப்பிலையின் நன்மைகளை புரிந்துகொண்டு முடிந்தவரை அதனை சாப்பிட்டு வாருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
கிச்சன் கீர்த்தனா : மேகி பக்கோடா!