‘‘மழைக்காலம், அதைத் தொடர்ந்து வரும் குளிர்காலம் எனப் பருவநிலை தொடர் மாற்றத்துக்கு உட்படுவதால் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் படையெடுக்கும் காலமிது. What fruits and vegetables to eat in winter?
எனவே, அந்த நேரங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
இந்தக் காலங்களில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது, சளித் தொந்தரவு ஏற்படும் என்பது தவறான எண்ணம். வெகு சிலருக்கு மட்டுமே அவற்றை அதிகம் சாப்பிட்டால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் இந்த சீசனில் அதிகமாகக் கிடைக்கும். அதேபோல பழங்களில் ஆப்பிள், பியர்ஸ், பிளம்ஸ் போன்றவையும் அதிகம் கிடைக்கும். இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்வது நல்லது. இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும், உடலின் நீர்ச்சமநிலையைப் பராமரிப்பதற்கு (Fluid Balance) நீர்க்காய்கறிகள் அதிகம் பயனுள்ளவையாக இருக்கும். உடலில் ஆற்றல் குறைந்தால் அதை அதிகரிக்கவும் இந்தக் காய்கறிகள் உதவுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால். ஃப்ளூ போன்ற தொற்றுகள் பாதிக்காது.
குழந்தைகள், வயதானவர்கள் சூப், வெந்நீர் அதிகம் கொடுக்கலாம். இவர்கள் இரவு நேரங்களில் பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் பகல் நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
மழை, குளிர்காலங்களில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ்களைத் தவிர்த்து, ஃபிரெஷ்ஷாகத் தயாரித்த ஜூஸைப் பருகலாம்.
இந்தக் காலத்தில் ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளைத் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் தொண்டைப் பகுதியில் நோய்த்தொற்றை ஏற்படுத்தவும், வயிற்றுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. ஃபிரெஷ்ஷாகச் சமைத்த உணவுகளே நல்லது.
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை போன்ற அதிக இனிப்புச் சுவையுள்ள பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை போன்ற பழங்களை அளவாகச் சேர்த்துக்கொள்ளலாம். ஜூஸ் பருகும்போது இனிப்பு சேர்க்கக் கூடாது.
பச்சைநிறக் காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்க்கவும். கிழங்கு வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கலைஞர் 100 விழாவுல புது சி.எம் : அப்டேட் குமாரு
கலைஞர் 100 விழாவில் பங்கேற்றதன் காரணம் : ஸ்டாலின் விளக்கம்!
கலைஞர் 100: ரஜினி சொன்ன சுவாரசிய சம்பவம்… ரசித்து கேட்ட ஸ்டாலின்
ஸ்டாலினுக்கு கலைஞர் கற்றுக்கொடுத்த ’அந்த’ அரசியல் பண்பு: கமல் பாராட்டு!
What fruits and vegetables to eat in winter?