அழகுக்கு என்பதை தவிர்த்து சரியான காலணிகளைத் தேர்ந்தெடுப்பது மழைக்கால பாத பராமரிப்புக்கு மிக முக்கியமானது.
மூடிய காலணிகள் பூஞ்சை தொற்று அபாயத்தை அதிகரிக்கும். முடிந்தவரை திறந்த காலணிகளை அணியுங்கள். இது கால்களை, தண்ணீர் தேங்காமல் விரைவாக உலர வைக்க உதவும். மூடிய காலணிகள் தேவைப்படும்போது கூடுதல் முன்னெச்சரிக்கையாக பாதங்கள் ஈரமாக இருந்தால் மாற்றுவதற்கு உதிரி காலுறைகளை எடுத்துச் செல்லுங்கள்.
சில நீர்ப்புகா காலணிகள் மழைக்காலத்துக்கு உதவியாக இருக்கும். அவை கால்களை அழுக்கு நீரில் இருந்து பாதுகாக்கும். ரப்பர் செருப்புகள் அல்லது ஃபிளிப் – ஃப்ளாப்கள் நல்ல சாய்ஸ்தான். அவை விரைவாக உலர்ந்து காற்று சுழற்சியை அனுமதிக்கும். அதிக மழையின்போது தோல் காலணிகளைத் தவிர்க்கவும். அவை சேதமடையும் மற்றும் உலர நீண்ட நேரம் எடுக்கும்.
வீடு திரும்பிய பின் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புடன் பாதங்களை நன்கு கழுவவும் . கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள். சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றும் என்பதால் கால்களைக் கழுவுவதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். மென்மையான தூரிகை மூலம் பாதங்களை மெதுவாகத் தேய்க்கவும். இது அழுக்கு மற்றும் இறந்த சருமத்தை அகற்ற உதவும். கழுவுவது போலவே உலர்த்துவதும் முக்கியம்.
கால்களை முழுமையாக உலர்த்துவதற்கு சுத்தமான, மென்மையான துண்டைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக கால் விரல்களுக்கு இடையில் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் கால் விரல்களுக்கு இடையில் நன்கு உலர்த்திய பிறகு, உங்களுக்கு வியர்வை இருந்தால் டால்கம் பவுடரைப் பயன்படுத்துங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : தவா புலாவ்!
கோட் வேர்ட் அக்செப்ட்… அப்டேட் குமாரு
என் மகன் செய்தது சரினு சொல்லல… டாக்டர் இப்படி பண்ணலாமா?: விக்னேஷின் தாயார் பேட்டி!