பியூட்டி டிப்ஸ்: வேனல் கட்டியிலிருந்து விடுதலை பெற…

Published On:

| By christopher

What can be done to prevent Heat Bumps?

கோடை காலத்தில் ஏற்படும் ஓர் உபாதை வேனல் கட்டிகள். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைந்து முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன. கடும் வெப்பத்தால் அவதியுறுவோருக்கு வேனல் கட்டிகளால் கூடுதல் அவஸ்தைகள் உண்டாகும். எனவே, வேனல் கட்டிகள் வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக்காலத்தில் மட்டுமாவது இந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் வேனல் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

வேனல் கட்டிகள் ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து தப்பிக்கலாம்.

சந்தனத்தை உரசிக்கொண்டு அதனுடன் எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.

சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்துத் வேனல் கட்டி மீது தடவினால் வேனல் கட்டி மறையும்.

கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் போட்டால் வேனல் கட்டி மறையும்.

வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் பத்து போட்டு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.

சிறிதளவு சுண்ணாம்புடன் சிறிது தேன் விட்டு குழைக்க வேண்டும். தேன் கிடைக்காவிட்டால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு குழைக்கலாம். அவ்வாறு குழைக்கும்போது அது சூடு பறக்க ஒரு கலவையாக வரும். அதை வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டிகள் குணமாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : வெள்ளரி சாப்ஸ்

தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 561 வழக்குகள்: விரைந்து விசாரிக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share